Home /News /national /

காதல் தோல்வி: இளம்பெண் மெட்ரோ ரயில் நிலையத்தின் மேலிருந்து குதித்து தற்கொலை!

காதல் தோல்வி: இளம்பெண் மெட்ரோ ரயில் நிலையத்தின் மேலிருந்து குதித்து தற்கொலை!

மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து கீழே குதிக்க முயன்ற போது அவரை தடுத்து நிறுத்த அங்கிருந்தவர்கள் சப்தம் போட்டனர்.

மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து கீழே குதிக்க முயன்ற போது அவரை தடுத்து நிறுத்த அங்கிருந்தவர்கள் சப்தம் போட்டனர்.

மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து கீழே குதிக்க முயன்ற போது அவரை தடுத்து நிறுத்த அங்கிருந்தவர்கள் சப்தம் போட்டனர்.

    காதல் தோல்வி காரணமாக இளம்பெண் மெட்ரோ ரயில் நிலையத்தின் மேலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஐதராபாத்தில் உள்ள எஸ்.ஆர்.நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் இளம்பெண் ஷபானா. அவர் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் மேல் மாடியில் இருந்து பலர் பார்த்து கொண்டிருக்கும் போதே கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

    இதில், படுகாயமடைந்த அவரை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அங்கிருந்தவர்கள் ஐதராபாத் காந்தி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு ஷபானாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மரணமடைந்தார்.

    பெண் குழந்தை பிறந்த உற்சாகம்.. ஹெலிகாப்டரில் குழந்தையை வீட்டிற்கு அழைத்து வந்த பெற்றோர் - வீடியோ!!

    இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் மரணமடைந்த ஷபானா உடலை பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனையில் வைத்துள்ளனர்.

    போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் காதல் தோல்வி காரணமாக ஷபானா தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.

    முன்னதாக, ஷபானா மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து கீழே குதிக்க முயன்ற போது அவரை தடுத்து நிறுத்த அங்கிருந்தவர்கள் சப்தம் போட்டனர். ஆனால் அவர் கீழே குதித்து பரிதாபமாக மரணம் அடைந்து விட்டார். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Suicide, Telangana

    அடுத்த செய்தி