`மேற்கு வங்கத்தில் இந்த முறை தாமரை மலரும்!’ - மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேட்டி

ஸ்மிருதி இரானி

பஞ்ச்போட்டா பகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பா.ஜ.க சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனப் பேரணியில் கலந்துகொண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து பேசினார்.

 • Share this:
  தமிழகம், கேரளா, அசாம், புதுவை, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலானது விரைவில் நடைபெற உள்ளன. இதனால், தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் கட்சிகள் தீவிரமாக பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் தேர்தல் களத்தில் அதிக அளவு பரபரப்பு நிலவி வருகிறது. இந்த தேர்தலில் மேற்குவங்கத்தில் எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என பா.ஜ.க தீவிரமான பிரசாரத்தை செய்து வருகிறது. இதனால், பா.ஜ.க மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே கடுமையான வார்த்தைப் போர் நிகழ்ந்து வருகின்றன.

  பா.ஜ.க மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே வார்த்தைப் போர்கள் நடைபெறுவது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மூத்த தலைவர்கள் என 50-க்கும் மேற்பட்டவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜக உள்ளிட்ட மாற்று கட்சிகளில் இணைந்து வருகின்றனர். இதனால், திரிணாமுல் காங்கிரஸ் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், பஞ்ச்போட்டா பகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பா.ஜ.க சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனப் பேரணியில் கலந்துகொண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து பேசினார்.

  ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, ``மம்தா பானர்ஜியின் ஆட்சியை வன்முறை வரையறுத்துள்ளது. மேற்கு வங்கம் முழுவதும் உள்ள ஜனநாயகக் குரல்கள் இந்த முறை நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க முடிவு செய்துள்ளன. பாரதிய ஜனதா கட்சியினரால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகளில் மக்கள் அதிகளவில் கலந்துகொண்டு ஆதரவு அளிக்கிறார்கள். நாங்கள் என்றும் அவர்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம். பேரணிகளின்போது மக்கள் அதிகளவில் கலந்துகொள்வது என்பது மேற்கு வங்கத்தில் தாமரை இந்தமுறை மலரும் என்பதை குறிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
  Published by:Ram Sankar
  First published: