Home /News /national /

பள்ளி வகுப்பறைகளாக மாறும் பழைய பேருந்துகள்

பள்ளி வகுப்பறைகளாக மாறும் பழைய பேருந்துகள்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

இயக்க முடியாத நிலையில் உள்ள அரசு பேருந்துகளை வகுப்பறைகளாக மாற்றி வாடகைக்கு விட கேரள அரசு முடிவு செய்துள்ளது.

    போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள பேருந்துகளை  உடைத்து விற்காமல், பள்ளி வகுப்பறைகளாக மாற்ற கேரள அரசு முடிவெடுத்துள்ளது.

    கடந்த 2020ம் ஆண்டில் தொடக்கத்தில் இந்தியாவில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. இதையடுத்து 2020 மார்ச் 23ம் தேதி நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக போக்குவரத்து முற்றிலும் நின்றுபோனது. இதன் காரணமாக கேரள அரசின் மாநில போக்குவரத்துக்கழகமான கேஎஸ்ஆர்டிசிக்கு (KSRTC) சொந்தமான பேருந்துகளில் பல மீண்டும் இயக்க முடியாத நிலைக்கு சென்றுள்ளது.

    இதுபோன்று இயக்க முடியாத நிலையில் இருக்கும் பழைய பேருந்துகளை உடைத்து விற்பனை செய்வது வழக்கம். ஆனால், கேரள அரசு இதற்கு மாற்றாக வேறு திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி இயக்கமுடியாத நிலையில் உள்ள அரசு பேருந்துகளை பள்ளி வகுப்பறையாக மாற்றி அதனை வாடகைக்கு விட்டு வருவாயை ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

    இது குறித்து கேரள போக்குவரத்து துறை அமைச்சர் ஆண்டனி ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில்,பேருந்துகளை உடைத்து விற்பனை செய்வதை விட சிறப்பாக பயன்படுத்துவதற்கான தேவைகள் உள்ளது. எனவே, எனவே தாழ்தளப் பேருந்துகளைப் பயன்படுத்தி வகுப்பறைகளாக மாற்ற முடிவு செய்தோம். குழந்தைகளுக்கு இது ஒரு புதிய அனுபவமாக இருக்க வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம் என தெரிவித்தார்.

    இதையும் படிங்க: வீட்டையே பழங்கால பொருட்காட்சியாக மாற்றிய அரசு ஊழியர்.. 28 ஆண்டுகளாக பழைய பொருட்களை சேகரித்து அசத்தல்...

    இதற்கான விருப்பம் கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டியிடம் இருந்து வந்ததாகவும் உடனடியாக இசைவு தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். கேரளாவில் சுமார் 400 அரசு பேருந்துகள் இயக்க முடியாத நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Govt Bus, Kerala, School

    அடுத்த செய்தி