Home /News /national /

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த கொடூரன் - போக்சோ சட்டத்தில் கைது

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த கொடூரன் - போக்சோ சட்டத்தில் கைது

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய நபரை போலீஸார் கைது செய்தனர்.

    ராஜஸ்தானின் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த லாரி ஓட்டுனரை போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

    ராஜஸ்தானை சேர்ந்த 8-வது படிக்கும் சிறுமியை அவரது வீட்டிற்கு அருகே வசிக்கும் 31 வயதான லாரி ஓட்டுனர் வீட்டில் வேலை இருக்கிறது எனக் கூறி அழைத்துள்ளார். சிறுமியும் தெரிந்தவர் தானே என சென்றது. சிறுமி என்றும் பாராமல் அந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அந்த கொடூரத்தை வீடியோவாக பதிவு செய்து மிரட்டியுள்ளார். இங்கு நடந்ததை வெளியில் சொன்னால் இந்த வீடியோவை வெளியிட்டு விடுவேன் எனக் கூறியுள்ளார். பயத்தின் காரணமாக சிறுமி இந்த விவகாரத்தை யாரிடமும் கூறவில்லை.

    Also Read: அரசு மருத்துவரின் அத்துமீறல்.. சொல்லில் அடங்கா துயரம் - கடிவாளம் போட்ட செவிலியர்கள்

    அந்த லாரி ஓட்டுனர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோவை சக நண்பர்களுக்கு செல்போன் மூலம் அனுப்பியுள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியைடந்த அந்த பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் சிறுமியின் தந்தையிடம் விவரத்தை கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்தவர் மகளிடம் விசாரித்துள்ளார். சிறுமி தனக்கு நடந்த கொடூரத்தை கூறியுள்ளார்.

    இதனையடுத்து  வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் அந்த நபர் மீது சிறுமியின் பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.  புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் நடந்து 10 நாள்கள் இருக்கும் எனக் கூறப்படுகிறது.  தலைமறைவாக இருந்த லாரி ஓட்டுனரை கைது செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ்  சிறையில் அடைத்தனர்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், Girl students, POCSO case, Police, Sexual abuse, Tamil News, Video gets viral

    அடுத்த செய்தி