Home /News /national /

என் கனவில் பகவான் கிருஷ்ணர் தோன்றி நாங்கள்தான் உ.பி.யில் ஆட்சி அமைப்போம் என்றார்- அகிலேஷ் யாதவ்

என் கனவில் பகவான் கிருஷ்ணர் தோன்றி நாங்கள்தான் உ.பி.யில் ஆட்சி அமைப்போம் என்றார்- அகிலேஷ் யாதவ்

அகிலேஷ் யாதவ்

அகிலேஷ் யாதவ்

உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் களம் சூடுப்பிடிக்க தொடங்கியதை அடுத்து, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பாரதிய ஜனதா கட்சியை கடும் கேலி செய்து வருகிறார்.

    உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் களம் சூடுப்பிடிக்க தொடங்கியதை அடுத்து, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பாரதிய ஜனதா கட்சியை கடும் கேலி செய்து வருகிறார்.

    நேற்று இவர் ஒரு இடத்தில் பேசும்போது, பகவான் கிருஷ்ணர் அவர் கனவில் தினமும் தோன்றி சமாஜ்வாதிதான் அடுத்து உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியமைக்கப் போகிறது என்று கூறுகிறார் என்று கூறி பாஜகவை லேசாக இடித்துரைத்தார்.

    ஏன் திடீரென பகவான் கிருஷ்ணர் இவரது பேச்சில் வந்தார் என்றால் பாஜக-வின் மாநிலங்களவை உறுப்பினர் ஹர்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை மதுரா தொகுதியில் நிறுத்துங்கள், கிருஷ்ணர் தன் கனவில் வந்து இதைக் கூறினார் என்று கடிதம் எழுதிருந்தார்.

    ஆனால் யோகி ஆதித்யநாத் கட்சி எந்த இடத்தில் சொல்கிறதோ அங்கேயே நிற்கிறேன் என்று கூறியுள்ளார்.



    இதைக்குறிப்பிட்டுதான் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், யோகி ஆதித்யநாத் தோல்வி அடைந்து விட்டார், அவரை யாரும் காப்பாற்ற முடியாது. ஒவ்வொரு இரவும் பகவான் கிருஷ்ணர் என் கனவில் தோன்றி சமாஜ்வாதி கட்சிதான் ஆட்சியமைக்கப் போகிறது என்று கூறுகிறார் என்று கிண்டலடித்தார் அகிலேஷ் யாதவ்.

    தேர்தல் நெருங்க நெருங்க பாஜக, சமாஜ்வாதிக் கட்சியினர் வார்த்தை மோதலை அதிகப்படுத்துவார்கள். சட்டம் ஒழுங்கு, ராமர் கோயில், பியூஷ் ஜெயின் ரெய்டு விவகாரம் என்று இரு கட்சிகளும் ஒருவரையொருவர் அடித்துக் கொள்ளாத குறையாக வாய்ச்சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Akilesh yadav, Assembly, BJP, Uttar pradesh

    அடுத்த செய்தி