முகப்பு /செய்தி /இந்தியா / உடைக்க முடியவில்லை.. ஏடிஎம்மை அப்படியே தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்..!

உடைக்க முடியவில்லை.. ஏடிஎம்மை அப்படியே தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்..!

ஏடிஎம் கொள்ளை

ஏடிஎம் கொள்ளை

ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாததால், அவர்கள் ஒரு வாகனத்தில் ஏடிஎம் இயந்திரத்தை கட்டி இழுத்து, அப்படியே பெயர்த்து எடுத்துச் சென்றுள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Rajasthan, India

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் அருகே ஒரே நாளில் இரண்டு ஏடிஎம் இயந்திரங்களை திருட்டு கும்பல் தூக்கிச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஜ்மீர் மாவட்டம், அரைன் (Arain) பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள், ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாததால், அவர்கள் ஒரு வாகனத்தில் ஏடிஎம் இயந்திரத்தை கட்டி இழுத்து, அப்படியே பெயர்த்து எடுத்துச் சென்றுள்ளனர்.

இதேபோன்று ரூபங்கர் (Roopangarh) பகுதியில் உள்ள மற்றொரு ஏடிஎம் இயந்திரத்தை அடியோடு பெயர்த்து எடுத்துச் சென்றுள்ளனர். அதில், ஒரு ஏடிஎம் இயந்திரத்தில் 30 லட்சம் ரூபாயும், மற்றொரு இயந்திரத்தில் 8 லட்சம் ரூபாயும் பணம் இருந்ததாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த இரு கொள்ளை சம்பவங்களில் ஒரே திருட்டு கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: ATM, Rajastan