ஹோம் /நியூஸ் /இந்தியா /

கோவிட்-19: நீண்ட வேலை நேரம், கண்முன் உயிருக்கு போராடும் நோயாளிகள்... மனஅழுத்ததில் தவிக்கும் மருத்துவர்கள்!

கோவிட்-19: நீண்ட வேலை நேரம், கண்முன் உயிருக்கு போராடும் நோயாளிகள்... மனஅழுத்ததில் தவிக்கும் மருத்துவர்கள்!

கோப்புப் படம்

கோப்புப் படம்

மயானங்களில் சடலங்களை எரிக்க கூட இடமின்றி வரிசையில் கிடத்தி வைத்திருக்கும் அவலங்களும் இன்னும் குறையவில்லை.

  • 3 minute read
  • Last Updated :

நாட்டில் கோவிட்-19 தொற்று கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் பாதிக்கப்படும் நோயாளிகளை அட்மிட் செய்ய கூட மருத்துவமனைகளில் இடம் கிடைக்காத நிலை தான் பல மாநிலங்களில் நீடித்து வருகிறது. கூடவே ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளிட்ட முக்கிய சிக்கல்களும் கோவிட் பாதிக்கப்பட்டவர்களின் உயிரிழப்புகளுக்கு காரணமாக இருந்து வருகின்றன. மயானங்களில் சடலங்களை எரிக்க கூட இடமின்றி வரிசையில் கிடத்தி வைத்திருக்கும் அவலங்களும் இன்னும் குறையவில்லை. குறிப்பாக தலைநகர் டெல்லி உட்பட பல வடமாநிலங்கள் கொரோனாவின் இறுகிய பிடியில் சிக்கி தவித்து வருகின்றன.

இந்நிலையில் இரவு, பகல் பார்க்காமல் தொடர்ந்து பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் கடும் மனஉளைச்சலில் சிக்கி தவிக்கும் நிலையையும் கண்கூடாக பார்க்க முடிகிறது. அரசு மருத்துவமனைகள் முதல் தனியார் மருத்துவமனைகள் வரை, டெல்லியில் நிலவி வரும் அபாயகரமான கொரோனா தொற்றின் இரண்டாவது அலை, மருத்துவர்கள் மற்றும் பிற சுகாதார ஊழியர்களின் உடல் மற்றும் உளவியல் நல்வாழ்வையும் பாதித்துள்ளதுவழக்கத்தை விட நீண்ட நேரம் ஷிஃப்ட் பார்ப்பது, கண்முன்னே பல நோயாளிகள் ஒவ்வொரு நாளும் இறப்பதைப் பார்ப்பது, நோயாளிகளின் குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டவரை எப்படியாவது காப்பாற்றுமாறு கெஞ்சி மன்றாடுவது உள்ளிட்ட பல மனதை உலுக்கும் நிகழ்வுகளுடன் அன்றாட பணிகளை மன வேதனையுடன் தொடர்ந்து பார்த்து வருவதாக மருத்துவர்கள் கோவிட்-19 இரண்டாம் அலையின் தங்களது மருத்துவமனை அனுபவங்களை பகிர்ந்துள்ளனர்.

இது பற்றி பேசியுள்ள அப்பல்லோ மருத்துவமனைகளின் மூத்த ஆலோசகர் டாக்டர் சூரன்ஜித் சாட்டர்ஜி, கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்தே காணப்படும் கோவிட் சூழல் மருத்துவ பணியாளர்களை பெரிதும் பாதித்துள்ளது. எங்களுக்கு முன்னால் வலியில் துடிப்பவர் மற்றும் இறப்புகளைக் கையாள ஒரு மருத்துவராக நாங்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளோம். ஆனால் தினமும் எங்கள் கண் முன் நிகழும் ஏராளமான இறப்புகள், நோயாளிகளை தாங்க முடியாத வேதனையில் தவிப்பது, வென்டிலேட்டர்களில் போராடுவது, அவர்களது உறவினர்கள் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றுமாறு கெஞ்சுவது உள்ளிட்ட சூழலில், மருத்துவ பணியில் ஈடுபட்டிருப்போர் வீரியமிக்க வைரஸை எதிர்த்து உதவி செய்ய இயலாத நிலையில் இருப்பதை போல உணரும் சூழல் ஏற்படுகிறது.

மேலும் மருத்துவர்களாகிய நாங்களும் நாளின் முடிவில் மனிதர்களாக இருக்கிறோம். எங்கள் சகாக்கள் மற்றும் சொந்த குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் பலர் தொற்று பாதிப்பால் அவதிப்படுவதையோ அல்லது இறப்பதையோ பார்த்து கொண்டு எங்களால் இருக்க முடியவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளார்.

சரிதா விஹாரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை மூத்த மருத்துவர் ஒருவர் தனது அனுபவத்தை பகிர்கையில், " கடந்த ஆண்டு கொரோனவால் பாதிக்கப்பட்ட என் மக்கள், இந்த ஆண்டும் தொற்றால் பாதிக்கப்பட்டார்.

Also read... லாக்டவுனால் முடங்கிய மக்கள் - நம்பிக்கை தரும் புல்லாங்குழல் விற்பனையாளரின் கதை!

சுமார் 15 மணி நேரங்களுக்கும் மேல் டியூட்டி பார்த்து விட்டு வீட்டிற்கு சென்ற பின், தொடர்ந்து வரும் அழைப்புகள் படுக்கை மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளிட்டவை பற்றிய தகவல்கள் குறிப்பாக இந்த 1 மாதத்தில் எங்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது" என்றார். ஃபோர்டிஸ் மருத்துவமனையின் நுரையீரல் மருத்துவ ஆலோசகர் டாக்டர் ரிச்சா சரீன். இவர் சமீபத்தில் தனது உடனடி குடும்ப உறுப்பினரை கோவிட் தொற்றுக்கு பறி கொடுத்தவர். இவர் பேசுகையில், கடந்த சில வாரங்களாக நிகழ்ந்து வரும் சம்பவங்கள் மருத்துவர்களின் மன ஆரோக்கியத்தை கடுமையாக பாதித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக தொற்றுநோயின் இரண்டாவது அலை கொண்டு வந்த மன அழுத்தத்தை கையாள நாங்கள் யாரும் உரிய பயிற்சி பெறவில்லை. மருத்துவர்களாகிய நாங்கள் எங்கள் நோயாளிகளின் நல்வாழ்வுக்காகவும், எங்கள் குடும்பத்திற்காக பனி முடிந்த சென்ற பின்னும் கூட வீட்டிலும் கவலைப்படுகிறோம். ஐ.சி.யுகளில் ஒவ்வொரு நாளும் மக்கள் கஷ்டப்படுவதையும் இறப்பதையும் பார்ப்பது வேதனையளிக்கிறது என்னு தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மட்டுமின்றி லேப் டெக்னீஷியன்கள் கூட மன வேதனையை உணர்ந்துள்ளனர். இது பற்றிய அனுபவத்தை பகிர்ந்துள்ள சஞ்சீவ் குமார் மிஸ்ரா என்ற லேப் டெக்னீஷியன், ஒருநாளைக்கு 18-20 சாம்பிள்ஸ்களை வீடுகளுக்கு நேரடியாக சென்று சேகரித்து வந்தேன். ஒரு சிலர் வீட்டிற்கு மீண்டும் சாம்பிள்ஸ் சேகரிக்க செல்லும் போது பலர் உயிரிழந்து விட்டனர் அல்லது மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்கள் என்ற தகவலை கேட்டு மனவேதனை அடைந்ததாக குறிப்பிட்டார். இதில் பக்லர் தனிப்பட்ட முறையில் முகம் மற்றும் பெயரால் எனக்கு ஏற்கனவே நன்கு பரிச்சயமானவர்கள் என்றும் வேதனையுடன் தெரிவித்தார்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Covid-19, Doctors, Mental Stress