Home /News /national /

முன்னாள் நீதிபதி தலைமையில் 8 பேர் கொண்ட லோக்பால் தேடல் குழு அமைப்பு

முன்னாள் நீதிபதி தலைமையில் 8 பேர் கொண்ட லோக்பால் தேடல் குழு அமைப்பு

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

  • News18
  • Last Updated :
    உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 8 பேர் கொண்ட லோக்பால் தேடல் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

    பிரதமர், மத்திய அமைச்சர்கள், முக்கிய அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க வகை செய்யும் லோக்பால் சட்டம் 2013-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. ஆனால் இதற்காக தலைவர் மற்றும் உறுப்பினர்களை மத்திய அரசு நியமிக்கவில்லை.

    தற்போது ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்துள்ள நிலையில், லோக்பால் அமைப்பை ஏற்படுத்த மத்தியில் ஆளும் பாஜக தாமதப்படுத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், லோக்பால் தேடுதல் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

    ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான இந்த குழுவில், அருந்ததி பட்டாச்சார்யா, ஏ.சூர்ய பிரகாஷ், இஸ்ரோ விஞ்ஞானி கிரண்குமார், ஓய்வுபெற்ற நீதிபதி சாகா ராம்சிங் யாதவ், காவல்துறை முன்னாள் தலைவர் சபீர்ஹுசைன் எஸ்.கண்டவவாலா, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி லலித் கே பன்வார், ரஞ்ஜித் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    ALSO WATCH...

    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Former SC judge, Lokpal search committee, PM Modi, Ranjana Prakash Desai

    அடுத்த செய்தி