Home /News /national /

லோக்பாலில் ஊழலுக்கு எதிரான புகார்களை ஆன்லைனில் புகார் செய்யலாம்... இணையதளம் தொடக்கம்

லோக்பாலில் ஊழலுக்கு எதிரான புகார்களை ஆன்லைனில் புகார் செய்யலாம்... இணையதளம் தொடக்கம்

லோக்பால் : அரசு ஊழியர்கள் முறைகேடு செய்தால், அவர்கள் மீதான புகார்கள் ஆதாரத்துடன் https://lokpalonline.gov.in என்ற முகவரியில் தெரிவிக்கலாம்.

லோக்பால் : அரசு ஊழியர்கள் முறைகேடு செய்தால், அவர்கள் மீதான புகார்கள் ஆதாரத்துடன் https://lokpalonline.gov.in என்ற முகவரியில் தெரிவிக்கலாம்.

லோக்பால் : அரசு ஊழியர்கள் முறைகேடு செய்தால், அவர்கள் மீதான புகார்கள் ஆதாரத்துடன் https://lokpalonline.gov.in என்ற முகவரியில் தெரிவிக்கலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    லோக்பாலில் ஊழலுக்கு எதிரான புகார்களை இலகுவான முறையில் தெரிவிக்க ஆன்லைன் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான இணையதளம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

    தற்போது வரை, லோக்பாலில் ஊழல் பற்றி புகார் தெரிவிக்க வேண்டும் என்றால், தபால், இ மெய்ல் அல்லது நேரடியாக மனுக்கள் அளிப்பது போன்றவற்றை பயன்படுத்தலாம். இதனை எளிமைப்படுத்தும் வகையில் lokpalonline.gov.in என்ற இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது.

    இதனை தொடங்கி வைத்து லோக்பால் தலைவரும் நீதிபதியுமான பினாகி சந்திர கோஸ் கூறுகையில், 'அரசு ஊழியர்கள் ஊழல், முறைகேடுகளை செய்தால் அவர்கள் மீது லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தா 2013 சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். அவர்கள் மீதான புகார்களை பெறுவதற்கு ஆன்லைன் வசதி இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் பெறப்படும் மனுக்கள் மீது விரைவான நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.

    நடவடிக்கை வெளிப்படைத் தன்மையாக இருக்கும் என்பதை இந்த சேவை உறுதி செய்யும். இதனை பயன்படுத்துவோருக்கு சிறப்பான சேவையை வழங்கம் என்று எதிர்பார்க்கிறேன்.' என்றார். லோக்பால் உறுப்பினர் நீதிபதி அபிலாஷா குமாரி கூறுகையில் , 'ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதுதான் இந்த நடவடிக்கையின் நோக்கம். இந்தியாவின் கிராமப் புறங்களில் இருந்து மனுக்கள் பெறப்பட்டாலும் அதையும் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து பகுதிகளிலும் லோக்பால் ஆன்லைன் புகார் இணையதளம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்' என்றார்.

    லோக்பால் ஆன்லைன் இணையதளத்தில் ஒருவர் அளிக்கும் புகாரின் ஸ்டேட்டஸ் குறித்து அவ்வப்போது அறிந்து கொள்ள முடியும். புகாரின் நிலை தொடர்பாக நாம் பதிவு செய்யும் இ மெயில் முகவரிக்கும் அப்டேட்டுகள் கிடைக்கும். எஸ்.எம்.எஸ். மூலமும் புகாரின் நிலைமை குறித்து அறியமுடியும் என்று லோக்பால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அரசு ஊழியர்கள் முறைகேடு செய்வதை தடுக்கும் வகையில் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா 2013 சட்டத்தின் கீழ் லோக்பால் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் தலைவராக நீதிபதி சந்திர கோஸை 2019 மார்ச் 23-ம்தேதி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்தார்.

    Also Read : 45 வது சென்னை புத்தக கண்காட்சி ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜனவரி 6ல் தொடங்குகிறது: பபாசி அறிவிப்பு

    கடந்த 2019-20-ல் லோக்பாலுகு 1,427 புகார்கள் வந்த நிலையில், 2020-21 -ல் புகார்களின் எண்ணிக்கை 92 சதவீதம் குறைந்து 110-ஆக இருந்தது. இதற்கு, எங்கு எப்படி புகார் அளிப்பது என்பது குறித்த விழிப்புணர்வு பொதுமக்களுக்கு இல்லாததே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: Lokpal search committee

    அடுத்த செய்தி