• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மக்களவையில் தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா அறிமுகம் - 293 எம்.பி.க்கள் ஆதரவு

மக்களவையில் தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா அறிமுகம் - 293 எம்.பி.க்கள் ஆதரவு

  • News18
  • Last Updated :
  • Share this:
    மக்களவையில் இன்று தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோசா அறிமுகப்படுத்துவதற்கான வாக்கெடுப்பில், 293 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 82 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்துள்ளனர்.

    பாகிஸ்தான், வங்கதேசம், ஆஃப்கானிஸ்தானில் இருந்து 2014-ம் ஆண்டிற்கு முன்பாக இந்தியாவில் சட்டத்திற்கு புறம்பாக அல்லது விசா காலம் முடிந்தும் வசித்து வரும் முஸ்லிம்கள் அல்லாத இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள், ஜைனர்கள், பவுத்தர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.

    இதற்காக 1955-ம் ஆண்டு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது. இந்த திருத்த சட்ட மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மக்களவையில் அறிமுகம் செய்தார்.

    காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசின. எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க தயாராக இருப்பதாக அமைச்சர் கூறினார்.

    மசோதாவை விவாதத்திற்கு ஏற்றுக்கொள்வதற்கான வாக்கெடுப்பு நடந்தது. 293 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 82 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர்.

    இதனால், மசோதா மீதான விவாதம் நடைபெறும். திமுக, காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் மசோதாவுக்கு எதிராக உள்ளன.

    மக்களவையில் பாஜகவுக்கு அறுதிபெரும்பான்மை இருப்பதால், மசோதா எளிதாக நிறைவேறும், அதே சமையத்தில் மாநிலங்களவையில் கூட்டணியில் இருக்கும் கட்சிகளே வேறு நிலைப்பாட்டால் மசோதாவுக்கு எதிராக இருந்தால், மசோதா நிறைவேறுவதில் சிக்கல் இருக்கும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: