Kashmir LIVE: காஷ்மீர் பிரிப்பு மசோதா மக்களவையில் நிறைவேறியது

Kashmir Issue Live | காஷ்மீர் விவகாரம் தொடர்பான செய்திகள் நேரலையாக உடனுக்குடன்...

  • News18
  • | August 06, 2019, 19:04 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 3 YEARS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    19:4 (IST)

    காஷ்மீர் மாநில மறுசீரமைப்பு மசோதாவுக்கு ஆதரவாக 366 வாக்குகளும், எதிராக 66 வாக்குகளும் பதிவாகியுள்ளன. 

    19:2 (IST)

    காஷ்மீர் பிரிப்பு மசோதா மக்களவையில் நிறைவேறியது.

    18:3 (IST)

    “இந்தியாவை இந்து நாடாக்க ஆசைப்படுகிறார்கள். முஸ்லிம்களை சமமானவர்களாகவே கருதுவது இல்லை. தேர்தலுக்காக பாகிஸ்தானை பலி ஆடாக ஆக்கினார்கள். இதுவரையிலும் இந்தியா இந்துக்களுக்கானது என்றே நம்புகிறார்கள்”- இம்ரான் கான்

    17:59 (IST)

    காஷ்மீர் விவகாரம் குறித்து இன்று மாலை காங்கிரஸ் காரிய கமிட்டி கூடி ஆலோசிக்க உள்ளது.

    17:49 (IST)

    ”தற்போதைய சூழலில் இந்தியாவில் குடிமக்கள் யாரும் சமமானவர்களாக இல்லை. இந்தியாவின் செயல் காஷ்மீரில் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவதாக உள்ளது. காஷ்மீர் பிரச்னையை ஐநா-வுக்கு எடுத்துச்செல்வோம். சர்வதேச மக்களுக்கு இனவாதத்துடன் ஆட்சியை பாஜக வழங்குவதை எடுத்துச்சொல்வோம்”- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

    16:58 (IST)

    ”இதை நான் நான்காம் முறையாகச் சொல்கிறேன். ஃபரூக் அப்துல்லாவை வீட்டுச் சிறையிலோ கைதோ செய்யவில்லை. அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருப்பார்கள். மக்களவை இதுகுறித்து கவலைப்படத் தேவையில்லை. அவர் நலமுடன் இல்லை என்றால் வெளியில் வந்திருக்கமாட்டார்”- அமித் ஷா

    16:30 (IST)

    ”என் மகன் ஓமர் அப்துல்லா சிறையில் உள்ளார். எங்களைக் கொலை செய்ய நினைக்கிறார்கள். நாங்கள் ஓடப்போவதில்லை. வாசற்கதவு திறக்கப்பட்டதும் நாங்கள் வெளியே வந்து போராடுவோம். நீதிமன்றத்துக்குச் செல்வோம். அமைதிக்கான தீர்மானங்களே எங்களுக்கு வேண்டும்”- ஃபரூக் அப்துல்லா

    16:27 (IST)
    16:27 (IST)

    ”காஷ்மீரின் முக்கிய அரசியல் தலைவர்கள் ரகசிய இடங்களில் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர். இது அரசியல் அமைப்பிற்கும் ஜனநாயகத்துக்கும் எதிரானது. இது மிகவும் குறு நோக்குப் பார்வையுடனான செயல். காஷ்மீரின் தலைமைக்கு இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள வெற்றிடத்துக்கு தீவிரவாதத்தால் எளிதில் உள்நுழைய முடியும். கைது செய்யப்பட்டுள்ள தலைவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்” - ராகுல் காந்தி.

    16:17 (IST)

    “நான் மாயமானது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுவது அனைத்தும் பொய். வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டேன். என்னுடைய மகள் வீட்டுக்குக் கூட என்னை அனுப்ப மறுக்கிறார்கள். காஷ்மீர் மக்களின் உரிமைகள் மொத்தமாகக் களவாடப்பட்டுள்ளது. இது நூறு சதவிகித சர்வாதிகார ஆட்சி” - ஃபரூக் அப்துல்லா.