மக்களவையில் நிறைவேறியது அணைகள் பாதுகாப்பு மசோதா!

தமிழகத்துக்கு சொந்தமான 4 அணைகள் கேரளாவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Web Desk | news18
Updated: August 3, 2019, 8:08 AM IST
மக்களவையில் நிறைவேறியது அணைகள் பாதுகாப்பு மசோதா!
மக்களவை
Web Desk | news18
Updated: August 3, 2019, 8:08 AM IST
மக்களவையில் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அணைகள் பாதுகாப்பு மசோதா நிறைவேறியது. மாநிலத்தின் உரிமையை பறிக்கும் நோக்கும் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை என்று ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் விளக்கம் அளித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள அணைகளின் கண்காணிப்பு மற்றும் பராமரிப்புக்காக பொதுவான வழிமுறைகளை வகுக்கும் வகையிலான அணை பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

இதன்மீது மக்களவையில் நேற்று விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய கேரள மாநிலத்தின் கொல்லம் தொகுதி எம்.பி.யான பிரேமச்சந்திரன், முல்லைப் பெரியாறு உள்ளிட்ட பழமையான அணைகளால் மனிதர்கள் மட்டுமின்றி வனப்பகுதிகளில் பல்லுயிர் பெருக்கத்திற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக வாதிட்டார்.


தமிழகத்துக்கு சொந்தமான 4 அணைகள் கேரளாவில் உள்ளதைக் குறிப்பிட்ட அவர், இரு மாநிலத்தைச் சேர்ந்த நிரந்தர உறுப்பினர்கள் மத்திய கமிட்டியில் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்ற திமுக உறுப்பினர் ஆ.ராசா, மாநில அரசுகளின் உரிமைகளை அணை பாதுகாப்பு மசோதா பறித்து விடும் என வாதிட்டார். கூடுதல் செயலாளர் மட்டத்திலான அதிகாரி எடுக்கும் முடிவே இறுதியானது என்பது இயற்கை நீதிக்கு எதிரானது என்றும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க... கழுத்தளவு தண்ணீரில் சிக்கிய குழந்தையை மீட்ட போலீஸ் எஸ்.ஐ

Loading...


அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...