LOK SABHA ELECTION 2019: 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

ராகுல் காந்தி அமித்ஷா போட்டியிடும் தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LOK SABHA ELECTION 2019: 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
வாக்குப்பதிவு.
  • News18
  • Last Updated: April 23, 2019, 7:46 AM IST
  • Share this:
நாடு முழுவதும் 3-வது கட்டமாக 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 116 மக்களவை தொகுதிக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. இதில் முதல்கட்டமாக 91 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 11-ம் தேதி தேர்தல் நடந்தது. 2-ம் கட்ட தேர்தல் 95 தொகுதிகளில் ஏப்ரல் 18-ம்  நடந்தது. அதனைத் தொடர்ந்து இன்று 3-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

அசாம், குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் நடைபெறும் இந்த தேர்தலில் 1,594 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.


குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும், கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று வாக்கெடுப்பு நடைபெறுகிறது. பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர், கும்மனம் ராஜசேகரன் உள்ளிட்டோர் களத்தில் உள்ள முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.

கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் தலா 14 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள 82 தொகுதிகளில் 10 தொகுதிகளுக்கு மட்டும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவ், வருண் காந்தி, அசம் கான், ஜெயபிரதா உள்ளிட்டோர் தலைவிதியை நிர்ணயிக்க மக்கள் இன்று வாக்களிக்க உள்ளனர்.சத்தீஸ்கர் மாநிலத்தில் 7 தொகுதிகளிலும், ஒடிசா மாநிலத்தில் 6 மக்களவை தொகுதிகளிலும் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. ஒடிசா சட்டப்பேரவைக்கும் 3-வது கட்டமாக 42 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

பீகார், மேற்குவங்க மாநிலங்களில் தலா 5 தொகுதிகளிலும், அசாம் மாநிலத்தில் 4 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறுகிறது. கோவா மாநிலங்களில் உள்ள 2 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

ஜம்மு காஷ்மீர், திரிபுரா மாநிலங்களிலும், தாதர் நாகர்வேலி, டாமன் மற்றும் டையு யூனியன் பிரதேசங்களிலும் உள்ள தலா ஒரு தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. அசம்பாவிதங்களை தவிர்க்க வாக்குப்பதிவு மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Also see... கட்சியாக உதயமாகும் அமமுக! தேர்தல் ஆணையத்தில் பதிவு


Also see... Lok Sabha Election Voting Live: 3ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம்  

Also see...




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்