மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது - முதல் ஓட்டு போட்ட சுதாகர் நடராஜன்

Lok Sabha Elections 2019 | தேர்தல் பணிகளில் ஈடுபடும் பாதுகாப்பு படை வீரர்கள், அதிகாரிகள் ஆகியோர் தபால் மூலமாக தங்களது வாக்குகளை பதிவு செய்யலாம்.

news18
Updated: April 6, 2019, 3:10 PM IST
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது - முதல் ஓட்டு போட்ட சுதாகர் நடராஜன்
வாக்குப்பதிவு
news18
Updated: April 6, 2019, 3:10 PM IST
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையின் விலங்குகள் பயிற்சிப்பள்ளியில் இன்று தொடங்கியது.

மக்களவை தேர்தல் நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடக்க உள்ளது. ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கும் தேர்தல் மே 19-ம் தேதி முடிகிறது. மே 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில், அருணாச்சல பிரதேசத்தில் வரும் 11-ம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இன்னும் 5 தினங்கள் இருக்கும் நிலையில், அங்குள்ள இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்பு படை பயிற்சி பள்ளியில் தபால் ஓட்டுப்பதிவு தொடங்கியது.

லோகித்பூரில் இருக்கும் விலங்குகள் பயிற்சி பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வீரர்கள் தபால் ஓட்டுகளை பதிவு செய்தனர்.டிஐடி சுதாகர் நடராஜன் முதல் வாக்கை பதிவு செய்தார். இதன் மூலம் 2019 மக்களவை தேர்தலில் முதலில் ஓட்டுபோட்டவர் என்ற பெயரை அவர் பெற்றுள்ளார்.

தேர்தல் பணிகளில் ஈடுபடும் பாதுகாப்பு படை வீரர்கள், அதிகாரிகள் ஆகியோர் தபால் மூலமாக தங்களது வாக்குகளை பதிவு செய்யலாம்.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.ஐ.பி.எல் தகவல்கள்:

POINTS TABLE:


SCHEDULE TIME TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:
First published: April 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...