கூட்டணி கட்சிகளில் யாருக்கெல்லாம் புதிய அமைச்சரவையில் இடம்? பிரதமர் மோடி ஆலோசனை

பிரதமர் மோடி மே 26 அல்லது 30-ம் தேதிகளில் பிரதமராக பதவியேற்கலாம் என்று தகவல்கள் கூறி வருகின்றன. ஆனால் இதுவரை பாஜக அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

news18
Updated: May 24, 2019, 12:43 PM IST
கூட்டணி கட்சிகளில் யாருக்கெல்லாம் புதிய அமைச்சரவையில் இடம்? பிரதமர் மோடி ஆலோசனை
மோடி
news18
Updated: May 24, 2019, 12:43 PM IST
மக்களவை தேர்தல் 2019-ல் பாஜக தனி பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ள நிலையில், இன்று புதிய அமைச்சரவை குறித்து பிரதமர் மோடி கட்சி தலைவர்களுடன் விவாதிப்பார் என்று கூறப்படுகிறது.

மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், பாஜக 300-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 2014-ம் ஆண்டு 282 தொகுதிகளில் பாஜக வெற்றிபெற்று இருந்தது.

1984-க்கு பிறகு தொடர்ந்து இரண்டு முறை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் கட்சி என்ற பெருமையையும் பாஜக பெற்றுள்ளது.


பிரதமர் மோடி மே 26 அல்லது 30-ம் தேதிகளில் பிரதமராக பதவியேற்கலாம் என்று தகவல்கள் கூறி வருகின்றன. ஆனால் இதுவரை பாஜக அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள மத்திய அமைச்சர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் இடையிலான கூட்டத்தில் புதிய அமைச்சரவை குறித்து விவாதம் முக்கிய பங்கு வகிக்க அதிக வாய்ப்புள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக நித்தின் கட்காரி டெல்லி சென்றுள்ளார்.

அதில், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள அருண் ஜேட்லிக்கு நிதி அமைச்சர் பொறுப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு பியூஷ் கோயல் அடுத்த நிதி அமைச்சர் என்ற பொறுப்பை ஏற்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறுகின்றன.

Loading...

மேலும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அமித் ஷாவும் இந்த முறை பாஜக சார்பில் காந்திநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளதால் அவருக்கு முக்கிய அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளது.

ராஜ்நாத் சிங்கிற்கு மத்திய அமைச்சரவையில் கண்டிப்பாக இந்த முறையும் ஒரு இடம் இருக்கும். கூட்டணிக் கட்சிகளில் யாருக்கெல்லாம் அமைச்சர் பதவி வழங்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சி சரிந்து வரும் நிலையில், வர்த்தக போர் போன்றவற்றிலும் இந்தியா பாதிப்படைய அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே இவற்றை எல்லாம் சமாளிக்கக் கூடிய புதிய மத்திய அமைச்சகம் குறித்து எதிர்பார்ப்பு மக்கள் மத்தியிலும் அதிகரித்து வருகிறது.

மேலும் பார்க்க:
First published: May 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...