வயநாடு தொகுதியில் போட்டியிடுவது குறித்து ராகுல் விளக்கம்!

தென் மாநிலங்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. தென் மாநிலங்களை பாஜக கவனிக்காமல் இருந்தது இல்லை என்று அமித் ஷா விளக்கமளித்துள்ளார்.

Web Desk | news18
Updated: April 3, 2019, 9:18 AM IST
வயநாடு தொகுதியில் போட்டியிடுவது குறித்து ராகுல் விளக்கம்!
ராகுல்
Web Desk | news18
Updated: April 3, 2019, 9:18 AM IST
நரேந்திர மோடியிடம் வெறுப்புணர்வை உணரும் தென்னிந்தியர்களுக்கு, தங்களின் ஆதரவை உணர்த்தவே கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

இதற்கு நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டுமென காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைவரின் விருப்பம் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பதிலடி கொடுத்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2 தொகுதிளில் போட்டியிடுகிறார். உத்தரப் பிரதேச மாநிலம், அமேதி தொகுதியில் போட்டியிடும் ராகுல்காந்தி, கேரள மாநிலம், வயநாடு மக்களவைத் தொகுதியிலும் போட்டியிடுகிறார். ஏப்ரல் 23-ம் தேதி கேரளா மாநிலத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், நாளை தனது மனுவை ராகுல் காந்தி தாக்கல் செய்ய உள்ளார்.

வயநாடு தொகுதியில் தான் போட்டியிடுவது குறித்து விளக்கமளித்த அவர், தென்னிந்திய மக்கள் பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து வெறுப்புணர்வை உணர்வதாக தெரிவித்தார். மேலும் தென்னிந்தியாவில் தனது தேவை இருப்பதாகவும், அதனை தெரிவிப்பதற்காகவே தாம் வயநாடு தொகுதியில் போட்டியிடுவதாகவும் கூறினார்.

இதற்கிடையே, தமிழகம் வந்த பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தூத்துக்குடி மற்றும் கோவையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர், தென் மாநிலங்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிப்பதில்லை என்ற பொய்யான தகவல் பரப்பப்படுவதாக குற்றம்சாட்டினார்.

தமிழகத்திற்கு இரண்டு அமைச்சர்களை பாஜக வழங்கியுள்ளதாகக் கூறிய அமித் ஷா, பொன்.ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமனுக்கு மத்திய அமைச்சர் பதவிகளை கொடுத்து தமிழகத்தை பெருமைபடுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதன் மூலம் தென் மாநிலங்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது என்றும் தென் மாநிலங்களை பாஜக கவனிக்காமல் இருந்தது இல்லை என்றும் அமித் ஷா விளக்கமளித்தார்.
Loading...
Also Read.... பழிவாங்கும் எண்ணத்தில் செயல்படும் தேர்தல் ஆணையம்: துரைமுருகன் குற்றச்சாட்டு!

எதிர்ப்புகளைத் தாண்டி ரஃபேல் ஊழல் விவகார புத்தகம் வெளியானது!

இந்தியாவின் வில்லன் மோடி - உதயநிதி ஸ்டாலின்

”மோடி ஆட்சியை ஜப்தி செய்யும் நேரம் இது” காங். வேட்பாளர் ஜோதிமணி தீவிர பிரசாரம்

Also See... தேர்தல் தர்பார் : வடநாடு VS வயநாடு அரசியல் ஆரம்பம்: ஆர்.கே.நகரை நினைவுபடுத்துகிறதா வருமானவரி சோதனை?தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...