Home /News /national /

முடிந்தது மக்களவை தேர்தல் - இறுதி கட்ட வாக்குப்பதிவு நிறைவு

முடிந்தது மக்களவை தேர்தல் - இறுதி கட்ட வாக்குப்பதிவு நிறைவு

வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு

இறுதிக்கட்ட வாக்குப்பதிவில் வாரணாசி தொகுதி ஒட்டுமொத்த நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இங்கு 2-வது முறையாக களமிறங்கியுள்ளார்.

  • News18
  • Last Updated :
    மக்களவை தேர்தலின் இறுதிகட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. தமிழகத்தில் 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலும் முடிவடைந்துள்ளது.

    கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கிய முதற்கட்ட வாக்குப்பதிவு முதல், கடந்த 12-ம் தேதி நடைபெற்ற 6-ம் கட்ட வாக்குப்பதிவு வரை, மேற்கு வங்கம் தவிர்த்து நாடு முழுவதும் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றது.

    இந்நிலையில், இறுதிக்கட்ட வாக்குப்பதிவு 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் இன்று நடைபெற்றது.

    பஞ்சாப் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில் தலா 13 தொகுதிகளிலும், மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு நடந்தது. பீகார், மத்திய பிரதேசம் மாநிலங்களில் தலா 8 தொகுதிகள், இமாச்சல் பிரதேசத்தில் 4 தொகுதிகள், ஜார்கண்ட் மாநிலத்தில் 3 தொகுதிகள் மற்றும் சண்டிகர் தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடந்தது.

    மேற்கு வங்கத்தில் கடந்த 6 கட்ட வாக்குப்பதிவுகளின் போது நடைபெற்ற வன்முறைகளை கருத்தில் கொண்டும், அண்மையில் பாஜக தலைவர் அமித்ஷா பேரணியில் ஏற்பட்ட கலவரத்தின் காரணமாகவும் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டனர்.

    எனினும், சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தது.

    இன்று தேர்தல் நடந்த 59 மக்களவை தொகுதிகளில் 918 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    இறுதிக்கட்ட வாக்குப்பதிவில் வாரணாசி தொகுதி ஒட்டுமொத்த நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இங்கு 2-வது முறையாக களமிறங்கியுள்ளார்.

    கடந்த முறை இங்கு போட்டியிட்ட மோடி 5 லட்சத்து 81,000 வாக்குகளை குவித்து, சுமார் 3,71,000 வாக்குகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தற்போதைய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், 2,09,000 வாக்குகளும், காங்கிரஸ் சார்பில் களமிறங்கிய அஜய் ராய் 75,000 வாக்குகளையும் பெற்றனர்.

    தமிழகத்தில் 4 சட்ட மன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் நிறைவடைந்துள்ளது.
    Published by:Sankar
    First published:

    Tags: Lok Sabha Election 2019, Tamil Nadu Lok Sabha Elections 2019

    அடுத்த செய்தி