வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி: உற்சாகமான தொண்டர்கள்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் போட்டியிடுவதற்காக ராகுல் காந்தி, வரும் 10-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Web Desk | news18
Updated: April 5, 2019, 8:36 AM IST
வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி: உற்சாகமான தொண்டர்கள்
ராகுல்
Web Desk | news18
Updated: April 5, 2019, 8:36 AM IST
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவது அக்கட்சி தொண்டர்களிடமும், நிர்வாகிகளிடமும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்திலிருந்து சென்றிருந்த கோஷி பேபி என்ற காங்கிரஸ் நிர்வாகி, ராகுல்காந்தி தென்னிந்தியாவில் போட்டியிடுவது தங்களுக்கு பெருமையளிப்பதாக தெரிவித்தார்.

வயநாட்டில் ராகுல்காந்தி போட்டியிடுவதால் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த செய்யது முகமது நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தென்னக மக்களை நேசிக்கிறார் என்பதை அடையாளப்படுத்துவதற்காக வயநாட்டில் போட்டியிடுவதாக தமிழக காங்கிரசின் மூத்த தலைவர் கே.வி.தங்கபாலு கூறினார்.

இந்திய மக்கள் பிரதமராக பரிசீலனை செய்யக்கூடிய தலைவர் நம்ம ஊரில் போட்டியிடுவது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயக ரீதியில், சாதி மத பேதங்களை கடந்து எல்லாவற்றையும் மீறிய அன்பைத்தான் நாம் இங்கு பார்க்க முடிகிறது.

மொத்தத்தில் ராகுல்காந்தி வயநாட்டில் போட்டியிடுவது அக்கட்சி நிர்வாகிகளிடமும், தொண்டர்களிடமும் அளவற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் போட்டியிடுவதற்காக ராகுல் காந்தி, வரும் 10-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, ரே பரேலி தொகுதியில் சோனியாகாந்தி 11-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளார். இந்த இரண்டு பேரின் வேட்புமனுத் தாக்கலின்போதும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொள்வார் என்று காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.
Loading...
Also See... இரண்டு தொகுதிகளில் போட்டி! ராகுல் வியூகம் சரியா? 


Also Read...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

ஐ.பி.எல் தகவல்கள்
POINTS TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:


SCHEDULE TIME TABLE:
First published: April 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...