• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பாதுகாப்புத்துறையை வலுப்படுத்தாமல் வல்லரசாக முடியுமா? பிரதமர் மோடி கேள்வி

பாதுகாப்புத்துறையை வலுப்படுத்தாமல் வல்லரசாக முடியுமா? பிரதமர் மோடி கேள்வி

மோடி, ராகுல், அமித்ஷா

மோடி, ராகுல், அமித்ஷா

அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி பிரதமராக வேண்டும் என்பது தனது விருப்பம் என்று கூறியுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
பாதுகாப்புத்துறையை வலுப்படுத்தாமல் எந்த நாடாவது வல்லரசாக முடியுமா என பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சிகளுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் மோடி

ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். அப்போது பாதுகாப்புத்துறையை வலுப்படுத்தாமல் எந்த நாடாவது உலகின் வல்லரசாக முடியுமா என அவர் வினவினார்.

மேலும் காங்கிரஸ் கட்சியோ மற்ற மெகா கூட்டணிகளோ தங்கள் தேர்தல் பரப்புரையில் நாட்டின் பாதுகாப்பு குறித்து பேசியுள்ளனவா என அவர் கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சிகள் தங்கள் கடந்த கால நடவடிக்கைகள் காரணமாக பாதுகாப்புத்துறை குறித்து எதுவுமே பேசமுடியாது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

யோகி ஆதித்யநாத்

உத்தர பிரதேச மாநிலம் கோராக்பூரில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பாஜக தொண்டர்கள் அனைவரும் கோராக்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை முன்பு நின்று, செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டும் என அவர் தெரிவித்தார். அப்போது தான் கோராக்பூர் கடந்த 5 ஆண்டுகளில் எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது என்பது வாக்காளர்களுக்கு தெரியும் என்றும் அவர் கூறினார்.

பாஜக தலைவர் அமித் ஷா

"ஜார்கண்ட் மாநிலத்தில் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர் அமித் ஷா, 55 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்யதாததை, 5 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி அரசு சாதித்துள்ளது என்றார். நாட்டில் பல்வேறு மொழிகள், பல்வேறு கலாச்சாரம் என வேறுபாடுகள் நாட்டு மக்களிடம் இருந்தாலும், ஒரே ஒரு ஒற்றுமையாக பிரதமர் மோடிக்கான ஆதரவு மட்டுமே உள்ளதாகவும் அவர் கூறினார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் தேர்தல் நிலவரம் குறித்து பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மோடியின் காலம் முடிவுக்கு வந்து விட்டதாகவும், மாற்றத்துக்கான நேரம் வந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.



பிரியங்கா காந்தி

டெல்லியில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கியுள்ள ஷீலா தீட்சித்துக்கு ஆதரவாக பிரியங்கா காந்தி திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அகிலேஷ் யாதவ்

இந்நிலையில் ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி பிரதமராக வேண்டும் என்பது தனது விருப்பம் என்றும், தான் உத்தர பிரதேச முதலமைச்சராக வேண்டும் என்பது மாயாவதியின் விருப்பம் என்று தெரிவித்துள்ளார்.

Also see...EXCLUSIVE சோனியா காந்தியின் வெற்றிவாய்ப்பு எப்படி உள்ளது

Also see...




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: