• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • புதிய இந்தியாவில் தேசத்தின் பாதுகாப்புதான் மிக முக்கியம்: பிரதமர் மோடி

புதிய இந்தியாவில் தேசத்தின் பாதுகாப்புதான் மிக முக்கியம்: பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் மோடி இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்யும்போது, அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் உடன் இருப்பார்கள் என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
நாடாளுமன்றத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிட பிரதமர் நரேந்திர மோடி இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார். இதையொட்டி, வாரணாசியில் பேரணி மேற்கொண்ட பிரதமர், கங்கை ஆரத்தி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், புதிய இந்தியாவில் தேசத்தின் பாதுகாப்புதான் மிக முக்கியம் என தெரிவித்துள்ளார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் வெற்றிபெற்று பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி, இந்த மக்களவைத் தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.

வாரணாசி தொகுதியில் அடுத்த மாதம் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால், இன்று காலை 11.30 மணியளவில் பிரதமர் மோடி வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளார்.

இதற்காக, நேற்று உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு வந்த பிரதமர் மோடி, வாரணாசியில் பிரமாண்ட பேரணியில் பங்கேற்றார். நேற்று மாலை சுமார் 5 மணியளவில் பனாரஸ் இந்து கல்லூரிக்கு வெளியே இந்து மகா சபையின் நிறுவனரான மதன் மோகன் மாளவியா சிலைக்கு மாலை அணிவித்து பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

பிரதமர் மோடியின் பிரமாண்ட பேரணி

பாஜக தொண்டர்களின் உற்சாக முழக்கத்துடன் திறந்தவெளி ஜீப்பில், சுமார் 6 கிலோ மீட்டர் தூர பிரமாண்டப் பேரணியை பிரதமர் மோடி தொடங்கினார். அவருக்கு வழிநெடுகிலும் பாஜக தொண்டர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பளித்தனர். மதன்புரா பகுதியில் ஏராளமான இஸ்லாமியர்களும் பிரதமர் மோடியை மலர்தூவி வரவேற்றனர்.

கங்கா ஆரத்தி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு

தொண்டர்களின் வெள்ளத்தின் வழியாக ஜீப்பில் நின்றபடி, தசாஸ்வமேத நதி முகத்துவாரத்தை பிரதமர் மோடி அடைந்தார். அவரது வருகையை முன்னிட்டு, கங்கை நதிக்கரை முழுவதும் வண்ணமயமான விளக்குகளால், ஏராளமான மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு, மின்னொளியில் ஜொலித்தது. கங்கை நதிக்கரைக்கு சென்று வழிபட்ட மோடி, பின்னர் அங்கு நாள்தோறும் வழக்கமாக மாலை நேரத்தில் நடைபெறும் கங்கா ஆரத்தி நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

மத்திரங்களை உச்சரித்தி கங்கைக்கு மோடி ஆரத்தி

மந்திரங்களை உச்சரித்து, ஆரத்தி காட்டி சுமார் அரை மணிநேரம் கங்கை நதியை பிரதமர் மோடி வணங்கினார். இந்த நிகழ்ச்சியில், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உத்தரப்பிரதேச பாஜக மாநிலத் தலைவர் மகேந்திரநாத் பாண்டே ஆகியோர் கலந்து கொண்டனர்.

மோடி


அதேபோல், தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், தமது மகன் ரவீந்திரநாத் குமாருடன் சென்று, பேரணி மற்றும் கங்கா ஆரத்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பயங்கரவாதத்தை தேசம் சகித்துக் கொள்ளாது : மோடி

கங்கா ஆரத்தி நிகழ்ச்சிக்குப் பிறகு வாரணாசியில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, தமக்கு தேசமே முதன்மையானது என குறிப்பிட்டார். பயங்கரவாதத்தை தேசம் ஒருபோதும் சகித்துக் கொள்ளாது என குறிப்பிட்ட அவர், பயங்கரவாதத்திற்கு உரிய பதிலடி கொடுக்க தேவையான வலிமையை தமக்கு தேசம் தந்திருப்பதாகவும் தெரிவித்தார்.புல்வாமாவில் 40 வீரர்களின் வீரமரணத்திற்குப் பிறகு, அதே பகுதியில் 42 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாக கூறிய மோடி, புதிய இந்தியாவில் தேசத்தின் பாதுகாப்பு மிக முக்கியம் என்றும் குறிப்பிட்டார். பின்னர் ஹரஹர மகாதேவ் என கூறிய பிரதமர் மோடி, மக்களைப் பார்த்து கரம் கூப்பி வணங்கினார்.

 மோடியுடன் வேட்பு மனுத் தாக்கல் செய்ய ஓ.பி.எஸ்-ம் செல்கிறார்

இந்நிலையில், இன்று காலை பிரதமர் மோடி வேட்பு மனுத் தாக்கல் செய்யும்போது, அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, சுஷ்மா ஸ்வராஜ், பியூஷ் கோயல், பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல், உத்தவ் தாக்கரே, நிதிஷ்குமார், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உடன் இருப்பார்கள் என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also see... அணுஆயுதங்களை தீபாவளிக்காகவா வைத்துள்ளோம்?


Also see... ஒரு போதும் பிரதமராக விரும்பியதில்லை: நரேந்திர மோடி


Also see... 
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: