• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • 5-ம் கட்ட மக்களவைத் தேர்தல்; இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது

5-ம் கட்ட மக்களவைத் தேர்தல்; இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி - பிரதமர் மோடி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி - பிரதமர் மோடி

மேற்குவங்கத்தில் கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் வன்முறை அரங்கேறியதால், இனி வரும் தேர்தல்களில் அனைத்து தொகுதிகளுக்கும் மத்திய படை பாதுகாப்பு அளிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
5-ம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெறும் 51 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. இதையொட்டி, அரசியல் கட்சித் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில், 4 கட்டங்களாக 374 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, 5-வது கட்டமாக 51 தொகுதிகளுக்கு நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதில், உத்தரப்பிரதேசத்தில் 14 தொகுதிகளுக்கும், ராஜஸ்தானில் 12 தொகுதிகளுக்கும், மேற்குவங்கம் மற்றும் மத்தியப்பிரதேச மாநிலங்களில் தலா 7 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

மேலும், பீகாரில் 5 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்டில் 4 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் தொகுதிக்கு மட்டுமே 3 கட்டமாக தேர்தல் நடைபெறுவதால், இதில் ஒரு பகுதிக்கு நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாகாந்தி போட்டியிடும் ரே பரேலி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதிகளுக்கும் நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி போட்டியிடுகிறார்.

இந்தத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. இதில், தலைவர்களும், வேட்பாளர்களும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, மேற்குவங்கத்தில் கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் வன்முறை அரங்கேறியதால், இனி வரும் தேர்தல்களில் அனைத்து தொகுதிகளுக்கும் மத்திய படை பாதுகாப்பு அளிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Also see... ஒடிசாவை சூறையாடியது ஃபோனி புயல்!


Also see... தமிழர்கள் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உள்ளது - பிரியங்கா


Also see... 




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: