LOK SABHA ELECTION 2019 | விறுவிறுப்பாக நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவு!

நாடாளுமன்றத் தேர்தலில் முதியவர்கள் தவறாமல் தங்களது ஜனநாயகக் கடமையாற்றி வருகின்றனர்.

Web Desk | news18
Updated: April 11, 2019, 1:27 PM IST
LOK SABHA ELECTION 2019 | விறுவிறுப்பாக நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவு!
மக்களவைத் தேர்தல்
Web Desk | news18
Updated: April 11, 2019, 1:27 PM IST
8 மாநிலங்கள், அந்தமான் நிகோபார் மற்றும் லட்சத் தீவுகளில் மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஒடிஷா மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெற்று வருகிறது.

ஆந்திர மாநிலத்தில் 25 தொகுதிகள், அருணாசலப் பிரதேசம் (2), அசாம் மாநிலத்தில் 5 தொகுதிகள், பிஹாரில் 4 தொகுதிகள், சத்தீஸ்கரில் ஒரு தொகுதி, ஜம்மு-காஷ்மீரில் 2 தொகுதிகள், மகாராஷ்டிராவில் 7 தொகுதிகள், மணிப்பூர், மிஸோரம், திரிபுரா, நாகாலாந்து, அந்தமான் நிகோபர் தீவுகள், லட்சத்தீவு ஆகியவற்றில் தலா ஒரு தொகுதி, மேகலாயாவில் 2 தொகுதிகள், ஒடிசாவில் 4 தொகுதிகள், உத்தப்பிரதேசத்தில் 8 தொகுதிகள், உத்தரகாண்டில் 5 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 2 தொகுதிகள் என 18 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றிலுள்ள 91 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்த முதற்கட்ட வாக்குப்பதிவில் 14 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். இதற்காக அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் காலை 7 மணி முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

நாகலாந்தில் 9 மணி நிலவரப்படி 29 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு மத்தியில் வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர்.

மகாராஷ்டிராவில் நாக்பூர் மக்களவைத் தொகுதியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகத் தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓட்டுப்போடுவது நமது கடமை என்றும், அனைவரும் தவறாது ஓட்டுப்போட வேண்டும் என்றும் கூறினார்.

ஆந்திராவில் உள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் மக்களவைத் தேர்தலுடன் தேர்தல் நடைபெற்று வருகிறது. காபந்து முதலமைச்சராக உள்ள சந்திரபாபு நாயுடு, தமது குடும்பத்தினருடன் அமராவதியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.
Loading...
இதேபோல் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியும் கடப்பா தொகுதியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருப்பதாக தன்னால் உறுதியாகக் கூற முடியும் என்றார்.

உத்திரபிரதேசத்தின் baghpat மக்களவைத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்த வாக்காளர்களுக்கு மலர்தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜனநாயகக் கடமையாற்றும் முதியவர்கள்

நாடாளுமன்றத் தேர்தலில் முதியவர்கள் தவறாமல் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர். மேற்கு வங்கம் கூச்பெஹரில் வயதான தம்பதி மற்றும் முதியவர்கள் எந்த உதவியும் இல்லாமல் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்தனர். மகாராஷ்டிராவில் 92 வயதுடைய முதியவர் தங்கள் குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார்.

Also see... காலத்தின் குரல்: மோடியின் நம்பிக்கை பலிக்குமா?


Also see... வெல்லும்சொல் | விலைக்கு வாங்கப்பட்டாரா  விஜயகாந்த்? பதிலளிக்கிறார் பிரேமலதா


Also see... 
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
First published: April 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...