தேர்தல் முடிவுகள் குறித்து தேசிய தலைவர்கள் என்ன சொல்கின்றனர்?

கேரளாவில் காங்கிரஸ் வெற்றி மற்றும் பாஜக தோல்வி குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள முதலமைச்சர் பினராயி விஜயன், தங்களது கட்சி தோல்வி அடையும் என்பதை எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.

தேர்தல் முடிவுகள் குறித்து தேசிய தலைவர்கள் என்ன சொல்கின்றனர்?
எல்.கே.அத்வானி
  • News18
  • Last Updated: May 24, 2019, 10:14 AM IST
  • Share this:
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் குளறுபடி நடந்துள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார். தேர்தலில் பாஜக-வின் வெற்றிக்கு மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பாஜக-வின் மகத்தான வெற்றிக்கு அத்வானி வாழ்த்து

பாஜக பெற்றுள்ள வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி, மகத்தான வெற்றிக்காக பாஜக தலைவர் அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கட்சித் தொண்டர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டின் வளமான எதிர்காலத்தை நோக்கி முன்னேறுவோம் என்றும் அத்வானி தெரிவித்துள்ளார்.


தோல்வியடைந்தவர்கள் தோற்றவர்கள் அல்ல - மம்தா பானர்ஜி

தேர்தல் முடிவு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன், தோல்வியடைந்தவர்கள் எல்லாம் தோற்றவர்கள் அல்ல என்றும் கூறியுள்ளார்.தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கருத்து

வாக்கு எந்திரங்கள் குறித்து மக்கள் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர் என்றபோதும், மக்கள் அளித்துள்ள தீர்ப்பை தான் ஏற்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் கூறியுள்ளார். பாஜக இந்த அளவுக்கு வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கவில்லை எனவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை குறைகூற விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

எனது முகத்தில் விழுந்த அடி - நடிகர் பிரகாஷ் ராஜ்

பெங்களூருவில் தோல்வியடைந்தது தனது முகத்தில் விழுந்த அடி என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். மதச்சார்பற்ற இந்தியாவை பாதுகாப்பதற்கான தனது போராட்டம் தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்."பாஜகவுடன் இணைந்து பயணிக்க விருப்பம்": நவீன் பட்நாயக் 

மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், ஒடிசா மக்களுக்காக பாஜகவுடன் இணைந்து செயல்படத் தயாராக உள்ளதாக கூறியுள்ளார்.நண்பர் மோடிக்கு வாழ்த்து- சத்ருகன் சின்ஹா

பாஜக பெற்ற தேர்தல் வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் வேட்பாளரான நடிகர் சத்ருகன் சின்ஹா, தாம் தோல்வியைத் தழுவினாலும், தனது நண்பர் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவிப்பதாக கூறியுள்ளார். பாஜக-வில் இருந்து காங்கிரசுக்கு மாறியது குறித்து வருந்துகிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், எந்த சூழலில் நான் பாஜவில் இருந்து வெளியேறினேன் என்று பார்க்க வேண்டும் என்றார். இதேபோல் மீண்டும் பாஜகவுக்கு செல்வீர்களா என்று கேள்விக்கு, நாளை எதுவும் நடக்கலாம் என்று கூறியுள்ளார்.

"மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் குளறுபடி": மாயாவதி

மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பற்றி கருத்து கூறியுள்ள பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் குளறுபடி நடந்துள்ளதாக கூறியுள்ளார். ஒட்டுமொத்த தேசமும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எதிர்த்து வருவதாக கூறியுள்ள மாயாவதி, இந்தத் தேர்தல் வெற்றியை அடுத்து மக்களுக்கு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் மீது எஞ்சியிருந்த நம்பிக்கையும் பொய்த்துப்போய்விடும் என்றார்.

காங்கிரஸ் கட்சி எம்.பி. சசிதரூர்

இதேபோல் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி எம்.பி. சசிதரூர், தனது அணி தோல்வி அடைந்தும், சதம் அடித்த பேட்ஸ்மேன் போல உணர்வதாக கூறியுள்ளார்.

மெஹபூபா முஃப்தி

காங்கிரஸ் கட்சிக்கு அமித்ஷாவைப் போல ஒரு தலைவர் தற்போது தேவைப்படுவதாக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெஹபூபா முஃப்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.பினராயி விஜயன்,

கேரளாவில் காங்கிரஸ் வெற்றி மற்றும் பாஜக தோல்வி குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள முதலமைச்சர் பினராயி விஜயன், தங்களது கட்சி தோல்விஅடையும் என்பதை எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார். இதேபோல், பாஜக-வுக்கு எதிரான கேரள மக்களின் முடிவு, காங்கிரஸ் பக்கம் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Also see.. வாக்காளர் அக்கறையின்மை: நகரங்கள் மற்றும் கிராமங்களை ஒப்பீடுக

Also see... 
தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 24, 2019, 10:05 AM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading