பயத்தின் காரணமாக ராகுல் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார்: பிரதமர்

நரேந்திர மோடி 15 முதல் 20 பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே உதவுவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

Web Desk | news18
Updated: April 2, 2019, 2:40 PM IST
பயத்தின் காரணமாக ராகுல் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார்: பிரதமர்
பிரதமர் மோடி
Web Desk | news18
Updated: April 2, 2019, 2:40 PM IST
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவது பயத்தின் காரணமாகத்தான் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதாக நேற்று அறிவிப்பு வெளியானதில் இருந்து, தென்னிந்தியாவின் பக்கம் ஒட்டுமொத்த தேசத்தின் அரசியல் பார்வையும் விழுந்துள்ளது. ஏற்கனவே அவர் உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2-வது தொகுதியாக வயநாட்டில் அவர் களம் காண இருப்பதால் பாரதீய ஜனதா கட்சிக்கு அழுத்தம் அதிகரித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் இன்று பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான அமித் ஷா அறிவிப்பு ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் பாரதீய தர்ம ஜன சேனா தலைவர் துசார் வேலப்பள்ளியை ராகுல்காந்திக்கு எதிராக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக அறிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் பேசிய மோடி, பெரும்பான்மை மக்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் சரியான வேட்பாளர்களை நிறுத்த காங்கிரஸ் பயப்படுவதாக கூறியுள்ளார். இதற்குக் காரணம், இந்துக்களை தீவிரவாதிகள் என்று காங்கிரஸ் முத்திரை குத்தி அவமதித்துள்ளது என்றும் பிரதமர் மோடி சாடினார்.

இதனிடையே புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், கேரளாவில் காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டாம் என பிரசாரம் செய்வேன் என்றும், தமிழகத்தில் காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டும் என பரப்புரை மேற்கொள்வேன் என்றும் பேசினார்.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வயநாடு மக்களவைத் தொகுதியில் 3-ம் கட்டமாக வரும் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தெலங்கானாவில் பேசிய ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சியால் மட்டும்தான் பாரதீய ஜனதா கட்சியை எதிர்க்க முடியும் என்றார். சீனா தினசரி 50,000 பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதாகவும், ஆனால் மோடி தினசரி 27,000 பேரின் வேலைவாய்ப்பை அபகரித்துவிடுவதாகவும் சாடினார்.
Loading...
மேலும் நரேந்திர மோடி 15 முதல் 20 பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே உதவுவதாக குற்றம்சாட்டினார். பண மதிப்பிழப்பு நடவடிக்கை பெரிய நஷ்டம் என்பதை 8 வயது குழந்தையை கேட்டாலும் சொல்லும் என்று ராகுல்காந்தி கடுமையாக சாடியுள்ளார்.

Also see... 
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see... VIDEO கமலுடன் போட்டோ எடுப்பதில் பெண்கள் இருவர் மோதல்தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.ஐபிஎல் தகவல்கள்:

First published: April 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...