Home /News /national /

Lok Sabha Election 2019: நான்காம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது

Lok Sabha Election 2019: நான்காம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது

பிரசாரத்தில் மோடி

பிரசாரத்தில் மோடி

71 தொகுதிகளிலும் அரசியல் கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் இன்று தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.

  • Last Updated :
நாடாளுமன்றத்துக்கு 4-வது கட்டமாக தேர்தல் நடைபெறும் 71 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் முடிவடைகிறது. இதையொட்டி, அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 3 கட்டங்களாக 303 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், 4-வது கட்டமாக 71 தொகுதிகளில் நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இதையொட்டி, 71 தொகுதிகளிலும் அரசியல் கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் இன்று தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 17 தொகுதிகளிலும், ராஜஸ்தான், உத்தரப்பிரதேச மாநிலங்களில் தலா 13 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த 71 தொகுதிகளில், கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் 45 தொகுதிகளில் பாஜக வெற்றிபெற்றுள்ளது.

இதனிடையே, வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி, தனது வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தார். இதையொட்டி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வாரணாசியில் நேற்று குழுமியிருந்தனர்.

மோடியின் சொத்து விவரம்:

நரேந்திர மோடி தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் தனக்கு 2 கோடியே 51 லட்சம் ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதில், ஒரு கோடியே 41 லட்சம் ரூபாய் அளவுக்கு அசையும் சொத்துக்களும், ஒரு கோடியே 10 லட்சம் அளவுக்கு அசையா சொத்துக்களும் இருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின்போது ஒரு கோடியே 65 லட்சம் ரூபாய் சொத்து இருப்பதாக மோடி குறிப்பிட்டிருந்த நிலையில், தற்போது 2 கோடியே 51 லட்சமாக உயர்ந்துள்ளது. வங்கி சேமிப்புக் கணக்கில் ₹4,143 இருப்பதாகவும், ₹1,13,000 மதிப்பிலான 4 தங்க மோதிரங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது மனைவி ஜசோதாபென்னின் தொழில், வருமானம் குறித்து தனக்கு தெரியாது என்றும் பிரமாண பத்திரத்தில் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Watch Also:

Published by:Yuvaraj V
First published:

Tags: Elections 2019, Lok Sabha Election 2019, Varanasi Constituency, Varanasi S24p77

அடுத்த செய்தி