• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • நீங்கள் செய்த செயல்களுக்கான விளைவுகள் காத்திருக்கின்றன - மோடிக்கு ராகுல் பதிலடி

நீங்கள் செய்த செயல்களுக்கான விளைவுகள் காத்திருக்கின்றன - மோடிக்கு ராகுல் பதிலடி

மோடி, ராகுல் காந்தி

மோடி, ராகுல் காந்தி

”எனது தந்தை குறித்து உங்கள் மனதில் உள்ள எண்ணங்களை வெளிப்படுத்துவது, உங்களை பாதுகாக்கப் போவதில்லை”

  • News18
  • Last Updated :
  • Share this:
ஆண், பெண் சமத்துவத்தை அரசியல் சாசனம் வழங்கியுள்ளதாகவும், முத்தலாக் தடை சட்டத்தை நிறைவேற்றி இஸ்லாமிய பெண்களின் உரிமையை பாதுகாக்க பாஜக விரும்புவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி

உத்தர பிரதேச மாநிலம், பதோகி பகுதியில், தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, பல இஸ்லாமிய நாடுகள், இஸ்லாமிய பெண்களுக்கு முத்தலாக்கை அனுமதிக்கவில்லை என்றார். அத்தகைய இஸ்லாமிய நாடுகள் வழங்கியுள்ள உரிமையை இந்தியாவில் உள்ள இஸ்லாமிய பெண்களுக்கு வழங்க, பாஜக விரும்புவதாக கூறினார்.

மேலும் பாஜக யாருடைய மத நம்பிக்கையையும் அவமதிப்பதில்லை என்றும், அரசியல் சாசனத்தை மட்டுமே பின்பற்றுவதாகவும் அவர் தெரிவித்தார். அரசியல் சாசனம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம உரிமையை வழங்குவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் பவானா பகுதியில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், திறந்த வாகனத்தில் சென்று ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார்.

பாஜக தலைவர் அமித்ஷா

ஹரியானா மாநிலம், பானிபட் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர் அமித்ஷா, 5 ஆண்டுகளில் 7 கோடி ஏழை பெண்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், 8 கோடி கழிவறைகளை உருவாக்கி பெண்கள் கண்ணியத்தோடு வாழ வழி செய்தவர் பிரதமர் மோடி என்றும் தெரிவித்தார்.

பாஜக வேட்பாளர் பாரதி கோஷ்

மேற்கு வங்க மாநிலம் கட்கல் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பாரதி கோஷ், திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களை மிரட்டும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களை வாக்களிக்க விடாமல் தடுத்தால், உங்கள் வீட்டிலிருந்து நாயை போல இழுத்து வெளியே எறிந்து விடுவேன் என கூறும் பாஜக வேட்பாளர், திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களை தாக்க உத்தர பிரதேசத்தில் இருந்து 1,000 பேரை அழைத்து வருவேன் என்றும் அந்த வீடியோவில் பேசுகிறார்.

நடிகர் சன்னி தியோல்

பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூரில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகர் சன்னி தியோல், அங்குள்ள தேவாலயம் ஒன்றில் வாக்கு சேகரித்தார். பின்னர் திறந்த வாகனத்தில் சென்றும் அவர் பரப்புரையில் ஈடுபட்டார்.

ஷீலா தீட்சித்

டெல்லியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஷீலா தீட்சித், சீலாம்பூர் பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ராகுல்காந்தி

ராஜீவ் காந்தி குறித்து பிரதமர் மோடி தமது மனதில் உள்ள கருத்துகளை வெளிப்படுத்துவது அவரை பாதுகாக்கப் போவதில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம், லக்னோவில் நேற்று பேசிய பிரதமர் மோடி, ராகுல்காந்தி அவர்களே உங்கள் தந்தை ராஜீவ்காந்தி நம்பர் ஒன் ஊழல்வாதியாக தான் மறைந்தார் எனக் குறிப்பிட்டார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, மோடி அவர்களே, போர் முடிந்து விட்டது. நீங்கள் செய்த செயல்களுக்கான விளைவுகள் காத்திருக்கின்றன. இந்த நேரத்தில் எனது தந்தை குறித்து உங்கள் மனதில் உள்ள எண்ணங்களை வெளிப்படுத்துவது, உங்களை பாதுகாக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.



Also see... பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதி மக்களின் வாழ்க்கை நிலை எப்படி?

Also see...




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: