• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • நாளை மறுதினம் இறுதிகட்டத் தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவு

நாளை மறுதினம் இறுதிகட்டத் தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவு

 தேர்தல் பிரசாரத்தில்

தேர்தல் பிரசாரத்தில்

7-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள 59 தொகுதிகளில் வாரணாசி, பாட்னா சாகிப், சண்டிகர், இந்தூர், அமிர்தசரஸ், கோரக்பூர், காசியாப்பூர் ஆகியவை நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதிகளாகும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
நாடாளுமன்றத் தேர்தலில் 7-வது மற்றும் கடைசி கட்டமாக 59 தொகுதிகளில் நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, மேற்குவங்கத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கு நேற்று இரவு 10 மணிக்கு பிரசாரம் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள 50 தொகுதிகளில் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைகிறது.

நாடாளுமன்றத் தேர்தல் கடந்த மாதம் 11-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற 6 கட்டத் தேர்தல்களில் மொத்தம் 483 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.

தமிழத்தின் வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, 7-வது கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் 8 மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாளை மறுதினம் நடைபெறவுள்ள 7-வது கட்டத் தேர்தலில் அதிகபட்சமாக பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேசம் மாநிலங்களில் தலா 13 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மேலும், மேற்குவங்கத்தில் 9, பீகார் மற்றும் மத்தியபிரதேச மாநிலங்களில் தலா 8, இமாச்சலப்பிரதேசத்தில் 4, ஜார்க்கண்டில் 3, சத்தீஷ்கரில் ஒரு தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாஜக தலைவர் அமித் ஷா, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர்.

மேற்கு வங்கத்தில் அமித் ஷா நடத்திய பேரணியின்போது, பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுக்கு இடையே மோதல் வெடித்ததால், ஒரு நாளுக்கு முன்னதாகவே பிரசாரத்தை முடித்துக் கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து, நேற்று இரவு 10 மணியுடன் மேற்கு வங்கத்தில் பிரசாரம் ஓய்ந்தது. எஞ்சிய 50 தொகுதிகளில் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது.

இதனால், வேட்பாளர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் இன்று இறுதிகட்டப் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். 7-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள 59 தொகுதிகளில் வாரணாசி, பாட்னா சாகிப், சண்டிகர், இந்தூர், அமிர்தசரஸ், கோரக்பூர், காசியாப்பூர் ஆகியவை நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதிகளாகும்.

ஆகவே, இந்த தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. குறிப்பாக மேற்கு வங்க மாநிலத்துக்கு கூடுதல் பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 19-ம் தேதி தேர்தல் முடிந்ததும் மின்னணு எந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்ட பிறகு 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also see... தீவிர அரசியலில் இறங்கிவிட்டோம்... தீவிரமாகத்தான் போசுவோம்: கமல்


Also see...




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: