மத்திய அமைச்சரவையில் தனிப்பொறுப்புடன் கூடிய 9 இணை அமைச்சர்கள் யார்... யார்...?

மோடி தலைமையிலான அமைச்சரவையில் மொத்தம் 24 பேர் இணை அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அமைச்சரவையில் தனிப்பொறுப்புடன் கூடிய 9 இணை அமைச்சர்கள் யார்... யார்...?
மத்திய அமைச்சரவை கூட்டம்
  • News18
  • Last Updated: June 1, 2019, 12:02 PM IST
  • Share this:
மத்திய அமைச்சரவையில் தனிபொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களாக 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறைக்கு தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சராக சந்தோஷ் குமார் கங்வார் நியமிக்கப்பட்டுள்ளார்.

புள்ளியியல், திட்ட செயல்பாடு துறைக்கு தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சராக ராவ் இந்திரஜித் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.


மேலும் ஆயுர்வேதா, யோகா, யுனானி சித்தா மற்றும் ஹோமியோபதி ஆகியவற்றுக்கான தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சராக ஸ்ரீபத் யெஸ்ஸோ நாய்க்  நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடகிழக்கு பகுதியின் மேம்பாடு, அணுசக்தி, விண்வெளித்துறை ஆகியவற்றுக்கான தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சராக ஜிதேந்திர சிங், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையின் தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சராக கிரன் ரிஜிஜு, கலாச்சாரத்துறை மற்றும் சுற்றுலாத்துறைக்கான தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சராக பிரகலாத் சிங் படேல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மின்சாரம், திறன் மேம்பாடு ஆகிய துறைகளுக்கு ராஜ்குமார் சிங்கும் வீட்டுவசதி, விமானப் போக்குவரத்து துறைக்கு ஹர்தீப் சிங் புரியும், கப்பல் போக்குவரத்து துறைக்கு மன்ஷுக் மாண்டாவியாவும் தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சராக வி.கே.சிங்கும், சமூக நீதித்துறையின் இணை அமைச்சராக ராம்தாஸ் அத்வாலேவும், கேரளாவைச் சேர்ந்த முரளிதரன் வெளியுறவுத்துறை இணை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மொத்தம் 24 பேர் இணை அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Also see... வசதியாக வாழ ஆசை... மெட்ரோ படம் பார்த்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்

Also see... 
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 1, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்