ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் வாக்குப்பதிவு நேரம் குறைப்பு!

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் வாக்குப்பதிவு நேரம் குறைப்பு!

குல்காம் தொகுதியில் 29-ம் தேதியும், சோபியான், புல்வாமா பகுதிகளில் அடுத்த மாதம் 6-ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது.

குல்காம் தொகுதியில் 29-ம் தேதியும், சோபியான், புல்வாமா பகுதிகளில் அடுத்த மாதம் 6-ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் தொகுதியில் வாக்குப்பதிவு நேரத்தை குறைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ஜம்மு, காஷ்மீர் பள்ளத்தாக்கு, லடாக் என, மூன்று பிராந்தியங்களை கொண்டது. காஷ்மீரில், மூன்று தொகுதிகள், ஜம்முவில், இரண்டு; லடாக்கில் ஒரு தொகுதி. இந்தத் தொகுதிகளுக்கு, ஏப்., 11, 18, 23 29, மே 6 என, ஐந்து கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. இதில், அனந்த்நாக் தொகுதிக்கு மட்டும், மூன்று கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது.

அனந்த்நாக் தொகுதியில் வரும் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. காலை 7 மணிமுதல் மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தலில் வன்முறை ஏற்பட்டது.

இதனால், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்க அனந்த்நாக் தொகுதியில் வாக்குப்பதிவு நேரத்தை குறைக்க வேண்டும் என்று காவல் துறை கோரிக்கை விடுத்தது.

இதனைத் தொடர்ந்து, மாலை 6 மணிக்குப் பதிலாக 4 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடையும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குல்காம் தொகுதியில் 29-ம் தேதியும், சோபியான், புல்வாமா பகுதிகளில் அடுத்த மாதம் 6-ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது.

Also see... ஜெயலலிதா பாணியில் டிடிவி தினகரன் அதிரடி முடிவு!


Also see... சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது உறுதி! ரசிகர்களை உற்சாகப்படித்திய ரஜினி


Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.Published by:Vaijayanthi S
First published: