“பயங்கரவாதிகளுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை; நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம்” - பிரதமர் மோடி

உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் ஹேமமாலினியை ஆதரித்து அவரது கணவரும் நடிகருமான தர்மேந்திரா பரப்புரையில் ஈடுபட்டார்.

Web Desk | news18
Updated: April 15, 2019, 8:37 AM IST
“பயங்கரவாதிகளுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை; நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம்” - பிரதமர் மோடி
மோடி
Web Desk | news18
Updated: April 15, 2019, 8:37 AM IST

பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் விருப்பத்தை நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


காஷ்மீர் மாநிலம், கத்துவா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சி ஜாலியன் வாலாபாக் விவகாரத்தில் கூட அரசியல் செய்வதாக தெரிவித்தார்.ஜாலியன் வாலாபாக் நிகழ்ச்சியில் கட்சி சார்பற்ற குடியரசு துணைத்தலைவர் கலந்து கொண்ட நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் மாநில முதலமைச்சர் கேப்டன் அம்ரீந்தர் சிங் அதனை புறக்கணித்துள்ளதாகவும் அவர் சாடினார்.


அம்ரீந்தர் சிங்கின் தேசபக்தி குறித்து தனக்கு நன்றாக தெரியும் என்றும், இவ்வாறு நடந்துகொள்ள அவர் நிர்பந்திக்கப்பட்டுள்ளார் என்றும் பிரதமர் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி காஷ்மீரில் ஆயுதப்படைகளை விலக்கிக் கொள்ள வேண்டும் என விரும்புவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி விரும்புவதாகவும், அதனை தங்களால் சகித்துக்கொள்ளவே முடியாது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.


பிரியங்கா காந்தி பிரசாரம்

இதனிடைய அசாம் மாநிலம், சில்சார் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வாக்கு சேகரித்தார். திறந்த வாகனத்தில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்த அவருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


நவீன் பட்னாயக் பிரசாரம்

ஒடிசாவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்னாயக், ஒடிசா சட்டப்பேரவைக்கான முதல்கட்ட தேர்தல் முடிந்து விட்ட பிறகும், பாஜக தனது முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்க தயங்குவது ஏன் என கேள்வி எழுப்பினார். ஒடிசாவுக்கான பாஜகவின் முதலமைச்சர் யார்? அவர் எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் என்பதை அறிந்து கொள்ள மக்கள் விரும்புவதாகவும் அவர் கூறினார்.


நடிகர் தர்மேந்திரா பிரசாரம்

இதனிடையே உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் ஹேமமாலினியை ஆதரித்து அவரது கணவரும் நடிகருமான தர்மேந்திரா பரப்புரையில் ஈடுபட்டார்.


அகிலேஷ் யாதவ் பிரசாரம்

உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்றில் அகிலேஷ் யாதவ் பங்கேற்று பேசினார். அப்போது பாஜகவினர் தங்கள் அரசு மத்தியில் உள்ளதாலேயே இந்திய எல்லை பாதுகாப்பாக உள்ளதாக கூறுவதாக குற்றம்சாட்டினார். ஆனால் எல்லையில் இருக்கும் பாதுகாப்புப்படை வீரர்களாலேயே இந்திய எல்லை பாதுகாப்பாக உள்ளதாக மக்கள் நம்புவதாகவும் அவர் கூறினார். அரசுகள் வரலாம் போகலாம் என்றும், வீரர்கள் எப்போதும் நாட்டை பாதுகாப்பதாகவும் அகிலேஷ் யாதவ் கூறினார்.


Also see... ஜாலியன்வாலா பாக் விவகாரத்தில் அரசியல் செய்வதா? மோடிக்கு பஞ்சாப் முதல்வர் கண்டனம்   

விஜயகாந்த் இன்று தேர்தல் பிரசாரம்... தொண்டர்கள் மகிழ்ச்சி...!

Also see... உலகக்கோப்பைக்கான இந்திய அணி இன்று அறிவிப்பு... அணியில் இடம் பிடிக்க யார் யார்கிடையே போட்டி

Also see... 
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...