மகாராஷ்டிராவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: அடுத்த பொதுமுடக்கத்தின் தொடக்கம் நாக்பூர்?

மகாராஷ்டிராவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: அடுத்த பொதுமுடக்கத்தின் தொடக்கம் நாக்பூர்?

நாக்பூரில் லாக்டவுன்

இன்று இரவு 8 மணி முதல் வரும் திங்கட்கிழமை காலை 8 மணி வரைக்கு மகாராஷ்டிராவின் ஜல்கோன் மாவட்டத்தில் பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நாக்பூரிலும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

  • Share this:
கொரோனா பாதிப்புகள் அதிகரித்ததால் மகராஷ்டிராவின் நாக்பூரில் வரும் மார்ச் 15ம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவின் நாக்பூரில் மார்ச் 15ம் தேதி முதல் 21ம் தேதி வரை பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 2ம் வாரத்தில் இருந்து கொரோனா பாதிப்புகள் மாநிலத்தில் கடுமையாக அதிகரித்து வருவதால் பல்வேறு பகுதிகளிலும் பொதுமுடக்கம் அமல்படுத்தும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே நாக்பூரில் அத்யாவசிய தேவைகளான காய்கறி, பழக்கடைகள், பால் கடைகள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழில் நிறுவனங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் 25% பேர் மட்டுமே பணியாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாக்பூர் காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட உள்ளது.

இன்று இரவு 8 மணி முதல் வரும் திங்கட்கிழமை காலை 8 மணி வரைக்கு மகாராஷ்டிராவின் ஜல்கோன் மாவட்டத்தில் பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நாக்பூரிலும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக் கொண்ட முதல்வர் உத்தவ் தாக்கரே, மாநிலத்தின் சில பகுதிகளில் கொரொனா காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்படலாம் என தெரிவித்தார்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,854 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 60% (13,659 பேர்) மகாராஷ்டிராவில் கண்டறியப்பட்டுள்ளது.

இதனிடையே ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் அளித்துள்ளார் முதல்வர் உத்தவ் தாக்கரே.

கொரோனா பரவலை பெருந்தொற்று என உலக சுகாதார அமைப்பு அறிவித்து இன்றுடன் ஒராண்டு நிறைவடைவது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: