புதுச்சேரியில் 11 லாரிகளில் பீர் பாட்டில்களைக் கொண்டு வந்த லாரி ஓட்டுநர்கள் பாதுகாப்பு கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவா மற்றும் மங்களூரில் இருந்து கடந்த மாதம் 21ம் தேதி ரூ.1 கோடி மதிப்புள்ள மதுபானங்கள் 11 லாரிகளில் ஏற்றப்பட்டு புதுச்சேரிக்கு புறப்பட்டன. மறுநாளே தமிழக எல்லையான ஒசூரை அடைந்ததும் கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக கிருஷ்ணகிரி மாவட்ட போலீசார் அந்த லாரிகளைத் தடுத்து நிறுத்தினர். அனுமதிக் கடிதம் பெற்ற குறிப்பிட்ட காலத்தில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு மதுபானங்களைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதைக் காரணம் காட்டி மதுபான லாரிகளை புதுச்சேரிக்குக் கொண்டு வரும் அனுமதியைப் பெற்றனர்.
அதன்படி கிருஷ்ணகிரியில் இருந்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அந்த லாரிகள் புதுச்சேரிக்கு புறப்பட்டன. புதுச்சேரி மாநிலத்திற்குச் செல்ல இருந்த நிலையில் மதுபானங்களைக் கொண்டு வருவதற்கு புதுச்சேரி அரசு அனுமதிக்காததால் அந்த லாரிகள் தற்போது புதுச்சேரி-விழுப்புரம் மாவட்ட எல்லையான பட்டானூரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு காலத்தில் பல்வேறு இடங்களில் மதுபானங்கள் திருட்டு நடந்து வரும் சூழலில் ரூ.1 கோடி மதிப்புள்ள மதுபானங்களுடன் பாதுகாப்பின்றி சாலையில் நிற்கிறோம் என ஓட்டுநர்கள் கூறினர். இரவு நேரத்தில் கத்தியுடன் மர்ம நபர்கள் தங்களை மிரட்டி மதுபானங்கள் கேட்பதாகவும் தங்கள் உயிருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதால் தங்களுக்கும் மதுபான லாரிகளுக்கும் போலீசார் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக தங்களுக்கான நடவடிக்கை இல்லையெனில் தீக்குளிப்புப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow
News18Tamil.com @
Facebook,
Twitter,
Instagram,
Sharechat,
Helo,
WhatsApp,
Telegram,
TikTok,
YouTube
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.