ஊரடங்கு மட்டும் போதாது: சோதனைகள் வேண்டும் - மத்திய அரசு ப.சிதம்பரம் அறிவுறுத்தல்

ஊரடங்கு மட்டும் போதாது: சோதனைகள் வேண்டும் - மத்திய அரசு ப.சிதம்பரம் அறிவுறுத்தல்
ப.சிதம்பரம் (கோப்பு படம்)
  • Share this:
ஊரடங்கு மட்டும் போதாது, மிக அதிகமாக மிகப் பரவலாக சோதனை (Testing) செய்யவேண்டும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிகப்பட்டுள்ளது. மேலும், கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர். இருப்பினும், நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவல் வேகமாக அதிகரித்துவருகிறது. போதுமான அளவில் கொரோனா பரவல் சோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று பலரும் குற்றம்சாட்டிவருகின்றனர்.

இதுகுறித்த மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் ட்விட்டர் பதிவில், ‘ஊரடங்கு மட்டும் போதாது, மிக அதிகமாக மிகப் பரவலாக சோதனை (Testing) செய்யவேண்டும் என்று மற்ற நாடுகளிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ளவேண்டும். ஊரடங்கு + கூடுதல் சோதனை தாம் நல்ல விளைவுகளைத் தரும் என்று ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் நமக்கு அறிவுறுத்துகின்றன. பிரதமர் அறிவுரையை ஏற்று ஊரடங்கைக் கடைப்பிடிக்கிறோம், ஒலி எழுப்பினோம், இன்று ஒளி ஏற்றுவோம். ஒலியும் ஒளியும் மட்டுமே கொரொனா தொற்றை ஒழிக்க முடியாது என்று விஞ்ஞானம் கூறுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.


 Also see:
First published: April 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading