கொரோனா தொற்று அதிகம் பாதித்த மாவட்டங்களில் 8 வாரங்கள் வரை ஊரடங்கு தேவை - ஐசிஎம்ஆர்

முழு ஊரடங்கு

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது

 • Share this:
  இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அதிக தொற்று ஏற்படும் மாவட்டங்களில் 6 முதல் 8 வாரங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்று ஐசிஎம்ஆர் அமைப்பின் தலைவர் பல்ராம் பார்கவா கூறியுள்ளார்.

  இந்தியாவில் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்துள்ளது. மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 30,000-ஐ கடந்து வருகிறது. மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதேப்போன்று மற்ற மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.

  இதனிடையே நாடு முழுவதும் தடுப்பூசி முகாம்கள் நடத்த வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளனர். மத்திய அமைச்சர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் பிரதமர் மோடியும் கொரோனா 2-வது அலை குறித்து அவ்வப்போது ஆலோசனை நடத்தி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

  ஐசிஎம்ஆர் அமைப்பின் தலைவர் பல்ராம் பார்கவா கொரோனா பரவலை கட்டுப்படுத்த 6 முதல் 8 வாரங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என்றுள்ளார். மேலும் கொரோனா பரிசோதனை செய்தவர்களில் 10 சதவீதம் பேருக்கு தொற்று உறுதியாகும் மாவட்டங்களில் கண்டிப்பாக ஊரடங்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

  நாட்டின் 718 மாவட்டங்களில் நான்கில் மூன்று பங்கு மாவட்டங்களில் 10 சதவீதம் பேருக்கு தொற்று உறுதியாவதாக கூறியுள்ள பல்ராம் பார்கவா, 10 லிருந்து 5 சதவீதமாக தொற்று உறுதியாவது குறையும்போது தான் ஊரடங்கு தளர்த்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
  Published by:Vijay R
  First published: