ஹோம் /நியூஸ் /இந்தியா /

தேவையில்லாத பயணங்களைத் தடுக்கவே அதிகக் கட்டணம்: கட்டண உயர்வுக்கு ரயில்வே நூதன விளக்கம்

தேவையில்லாத பயணங்களைத் தடுக்கவே அதிகக் கட்டணம்: கட்டண உயர்வுக்கு ரயில்வே நூதன விளக்கம்

கோப்பு படம்

கோப்பு படம்

பெட்ரோல் டீசல், விலை அதிகரிப்பு, கியாஸ் விலை அதிகரிப்பு, இதனால் அனைத்தும் விலை அதிகரிப்பு என்று சென்றுக் கொண்டிருக்க ஆறுதலுக்காக ஊருக்குச்செல்பவர்கள் தலையிலும் கையை வைத்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் சாடியுள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  சிறப்பு ரயில்களாக இயக்கப்படும், குறைந்த தூர பயணியர் ரயில்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ள நிலையில், 'தேவையில்லாத பயணத்தை தடுக்கவே, கட்டணம் சற்று அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது' என, ரயில்வே கூறியுள்ளது.

  கொரோனா வைரஸ் பரவலின்போது, நாடு முழுதும் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் சற்று தளர்த்தப்பட்டபோது, சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டன. முதலில் நீண்ட துார ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டன. தற்போது, குறுகிய தொலைவு ரயில்களும், சிறப்பு ரயில்களாக இயக்கப்படுகின்றன. இந்த குறுகிய தொலைவு சிறப்பு ரயில்களுக்கானகட்டணம் அதிகமாக உள்ளதாக, பல்வேறு தரப்பில் புகார் கூறப்பட்டுள்ளது.

  இதனைத் தொடர்ந்து ரயில்வே தனது நூதன விளக்கத்தில், “கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும்தொடர்கிறது. சில மாநிலங்களில் திடீரென உயர்ந்துள்ளது. இந்த நிலையில், வீண் ரயில்பயணத்தை தடுக்கவே, சற்று கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மெயில் மற்றும்எக்ஸ்பிரஸ் ரயில்களின் முன்பதிவு இல்லாத பெட்டிகளுக்கான கட்டணம், இந்த சிறப்பு ரயில்களுக்கு வசூலிக்கப்படுகிறது. தேவையில்லாத பயணத்தை தவிர்க்கவும்” என்று கூறப்பட்டுள்ளது.

  ஆனால் ஒரேயொரு ஆறுதல் என்னவெனில் இன்னமும் மத்திய அரசு கையை வைக்காத புறநகர் ரயில் சேவைக்கு இந்தக் கட்டண உயர்வு பொருந்தாது.

  சமீபத்தில் குறைந்த தூர பயணிகள் ரயில்களான எலெக்ட்ரிக் மல்டிப்பிள் யூனிட்ஸ், உள்ளிட்ட பாசஞ்சர் ரயிகளுக்கான கட்டணங்களை உயர்த்தியுள்ளது. நீண்ட தூர மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயிகளின் அன் ரிசர்வ்டு கட்டணத்துக்கு இப்போது சாதாரண ரயில் கட்டணம் உயர்தப்பட்டுள்ளது.

  கோவிட் காலத்தில் ஏகப்பட்ட ஸ்பெஷல் ரயில்களை புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்வதற்காக ரயில்வே இயக்கியதுல் நஷ்டம் அடைந்ததாகக் கூறி கட்டணத்தை அதிகரித்து விட்டு கொரோனா பரவலைக் காரணம் காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் சாடியுள்ளனர்.

  பெட்ரோல் டீசல், விலை அதிகரிப்பு, கியாஸ் விலை அதிகரிப்பு, இதனால் அனைத்தும் விலை அதிகரிப்பு என்று சென்றுக் கொண்டிருக்க ஆறுதலுக்காக ஊருக்குச்செல்பவர்கள் தலையிலும் கையை வைத்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் சாடியுள்ளனர்.

  Published by:Muthukumar
  First published:

  Tags: Indian Railways, PM Modi, Train