கடன் தவணை செலுத்துவதில் மேலும் கால அவகாசம் வழங்கப்படாது - ரிசர்வ் வங்கி திட்டவட்டம்

ரிசர்வ் வங்கி

கடன் தவணை செலுத்துவதில் மேலும் காலஅவகாசம் வழங்கப்படாது என்று உச்ச நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

 • Share this:
  கொரோனா ஊரடங்கு காரணமாக வங்கிகளில் பெற்ற கடனுக்கான மாத தவணையை செலுத்த மார்ச் முதல் ஆகஸ்ட் வரை 6 மாதங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. அவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என்றும், வட்டிக்கான வட்டியை ரத்து செய்ய உத்தரவிட கோரியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான விசாரணையில், 2 கோடிக்கும் குறைவான கடனுக்கு மட்டும் 6 மாத தவணை சலுகைக்கு வட்டி மீதான வட்டி ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு கடந்த 5-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதுதொடர்பாக முறையான அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும், ஒரு வாரத்திற்குள் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி பதிலளிக்கவும் உத்தரவிட்டது.

  இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில், கடன் தவணை செலுத்த மேலும் காலஅவகாசம் வழங்க இயலாது என்று தெரிவித்துள்ளது. கடனை திருப்பி செலுத்துவதில் விலக்கு அளிப்பது தொடர்ந்தால் வங்கி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதுடன், பணப்பரிவர்தனையில் சுணக்கம் ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

  மேலும் படிக்க...நில அளவீட்டுப் பணியை 30 நாட்களில் முடிக்கவில்லை எனில் கட்டணத்தை திருப்பி வழங்க வேண்டும் - உயர் நீதிமன்றம் உத்தரவு  மேலும், கடனை உரிய நேரத்தில் செலுத்த வேண்டும் என்ற கொள்கையை தகர்த்துவிடும் எனவும், ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
  Published by:Vaijayanthi S
  First published: