பாஜக பிரச்சாரங்களிலும் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி புறக்கணிப்பு!

மக்களவைத் தேர்தலில் தாம் போட்டியிடவில்லை என முரளி மனோகர் ஜோஷி தெரிவித்துள்ளார்.

Tamilarasu J | news18
Updated: March 26, 2019, 4:50 PM IST
பாஜக பிரச்சாரங்களிலும் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி புறக்கணிப்பு!
அத்வானி, முதளி மனோகர் ஜோஷி
Tamilarasu J | news18
Updated: March 26, 2019, 4:50 PM IST
உத்தரப்பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலுக்கு பா.ஜ.க வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்யும் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் மூத்த தலைவர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ள 40 நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை பா.ஜ.க வெளியிட்டுள்ளது.

அதில், பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா, நிதின் கட்கரி, அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ், உமா பாரதி ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தப் பட்டியலில் பா.ஜ.க மூத்த தலைவர்கள் அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷியின் பெயர்கள் இடம்பெறவில்லை.

ஏற்கெனவே வேட்பாளர் பட்டியலில் இடம்பெறாத அத்வானி, தற்போது நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்தில் இருந்தும் ஓரங்கட்டப்பட்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதனிடையே, தொண்டர்களுக்கு முரளி மனோகர் ஜோஷி எழுதியுள்ள கடிதத்தில், வரும் மக்களவைத் தேர்தலில் தாம் போட்டியிடவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் பார்க்க: 
Loading...
First published: March 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...