முகப்பு /செய்தி /இந்தியா / கட்சித் தலைவருக்கே எதிராக போர்க்கொடி தூக்கிய எம்.பிக்கள்.. தனித்து விடப்பட்ட சிராக் பஸ்வான்!

கட்சித் தலைவருக்கே எதிராக போர்க்கொடி தூக்கிய எம்.பிக்கள்.. தனித்து விடப்பட்ட சிராக் பஸ்வான்!

ராம்விலாஸ் பஸ்வானுடன் சிராக் பஸ்வான்

ராம்விலாஸ் பஸ்வானுடன் சிராக் பஸ்வான்

சிராக் பஸ்வானுக்கு எதிராக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் உருவாக்கிய லோக் ஜன சக்தி கட்சியினை அவரின் மறைவுக்கு பிறகு அவருடைய மகன் சிராம் பஸ்வான் தலைமையேற்று நடத்தி வருகிறார்.

பீகாரைச் சேர்ந்த ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சி கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து 6 இடங்களில் வெற்றி பெற்றது. இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபரில் அக்கட்சியின் நிறுவனரும் மத்திய அமைச்சருமாக இருந்த ராம்விலாஸ் பஸ்வான் உடல்நலக்குறைவால் காலமானார். அதனையடுத்து அக்கட்சியின் தலைவரானார் சிராக் பஸ்வான், இவர் மறைந்த ராம்விலாஸ் பஸ்வானின் மகன் ஆவார்.

கடந்த ஆண்டு நவம்பரில் பீகார் சட்டமன்ற தேர்தலை பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய லோக் ஜனசக்தி கட்சி தனியாகவே களம் கண்டு ஒரு இடத்தில் கூட வெற்றி பெறமுடியாமல் மோசமான தோல்வியை பதிவு செய்தது. ஆனால் தேர்தலுக்கு முன்பாகவே 200க்கும் மேற்பட்ட தலைவர்கள் லோக் ஜனசக்தியில் இருந்து வெளியேறி முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தனர். இது சிராக் பஸ்வானுக்கு கடும் நெருக்கடியை தேர்தல் நேரத்தில் தந்தது.

Also Read:   இனி காங்கிரஸ் கட்சி தனித்தே தேர்தல்களை சந்திக்கும்: மகாராஷ்டிரா ஆளும் கூட்டணியில் விரிசல்?

இந்நிலையில் தற்போது சிராக் பஸ்வானுக்கு எதிராக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். சிராக் பஸ்வான் உட்பட அக்கட்சிக்கு 6 எம்.பி.க்கள் இருக்கும் நிலையில், அக்கட்சி எம்.எல்.ஏக்களான சந்தன் சிங், பிரின்ஸ் ராஜ், வீனா தேவி, மெஹ்மூப் அலி கைசர், ஆகியோர் சிராக் பஸ்வானுக்கு பதிலாக மற்றொரு எம்.பியும் ராம் விலாஸ் பஸ்வானின் உறவினருமான பசுபதி குமார் பரஸை லோக் ஜனசக்தி கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக்க வேண்டும் என கையெழுத்திட்டு சபாநாயகர் ஓம் பிர்லாவை நேரில் சந்தித்து கடிதம் அளித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சபாநாயகரிடம் இருந்து தகுந்த பதில் கிடைக்கும் என நம்புவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Also Read:   ‘பிரதமர் மோடி குறித்து திமுகவினர் மட்டும் பொய் பேசலாமா?’: கிஷோர் கே.சாமி கைதுக்கு காயத்ரி ரகுராம் கண்டனம்!

இதனிடையே சொந்த கட்சியின் எம்.பிக்களே தன்னை நாடாளுமன்ற குழுத் தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கான காய்நகர்த்தலில் ஈடுபட்டிருப்பதால் சிராக் பஸ்வான் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

First published:

Tags: Ram Vilas Paswan