நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்ற வந்த நிலையில், காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ரஞ்சானி பாடீல் மத்திய சட்ட அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார். லிவ் இன் உறவில் இருக்கும் ஜோடியின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசுக்கு ஏதும் திட்டம் உள்ளதா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில் ,லிவ் இன் உறவில் இருக்கும் ஜோடிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும விதமாக குடும்ப வன்முறை பாதுகாப்பு சட்டம் 2005 உள்ளது. திருமணம் என்று மட்டுமல்லாது ஒரே வீட்டில் சம்மதத்துடன் லிவ் இன் உறவில் இணைந்து வாழும் பெண்களுக்கும் குடும்ப வன்முறை பாதுகாப்பு சட்டம் பாதுகாப்பு தரும்.
திருமணமான பெண்கள் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு வழங்கும் அதே சட்டப் பாதுகாப்பு லிவ் இன் உறவில் இருக்கும் பெண்களும் பெறாலம் என்றார். உச்ச நீதிமன்றமும் பல்வேறு லிவ் இன் வழக்குகளின் தீர்ப்புகள் மூலம் இதை உறுதி செய்துள்ளது என அமைச்சர் ரிஜிஜூ தனது பதிலில் கூறியுள்ளார். சமீப காலமாகவே லிவ் இன் உறவில் இருக்கும் ஜோடிகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், வன்முறை சம்பவங்கள் அதிகம் காணப்படுகின்றது.
இதையும் படிங்க: கொரோனா பயம்! 3 ஆண்டுகள் வீட்டு அறையை விட்டு வெளிய வராத பெண்கள்..போலீஸ் உதவியுடன் மீட்பு
குறிப்பாக லிவ் இன் உறவில் இருந்த டெல்லி இளம் பெண் ஷ்ரத்தா வால்கர் படுகொலை நாட்டை பெரும் அதிர்ச்சி அடைய வைத்தது. இந்த மரணத்தை தொடர்ந்து இது போன்ற பல குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அம்பலமாகத் தொடங்கின. எனவே, லிவ் இன் உறவில் இருக்கும் பெண்களுக்கும் சட்டப் பாதுகாப்பை வழங்க வேண்டும் என ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கை எழத் தொடங்கியது. அதன் அடிப்படையில் தான் காங்கிரஸ் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு சட்ட அமைச்சர் பதில் மூலம் இந்த விளக்கத்தை தந்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Domestic Violence, Parliament Session, Relationship, Union Govt