கோவிட் வைரஸின் உருமாறிய வகையான ஓமைக்ரான் வைரஸ், இந்தியாவில் இருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் உலக அரங்கில் ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்படும் 30வது நாடாக இந்தியா மாறியிருக்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக நாடுகளை புரட்டிப் போட்டிருக்கும் கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. ஒவ்வொரு வேரியண்டாக உருமாறி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்டு கோடிக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், டெல்டா எனும் வேரியண்ட் உலக அளவில் வேகமாக பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த பாதிப்பில் இருந்து உலக நாடுகள் தற்போது தான் மெல்ல மீண்டுவரும் நிலையில் ஓமைக்ரான் எனும் புதிய வேரியண்ட் புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட ஓமைக்ரான் வகை கொரோனா ஆபத்தான இருக்கலாம் எனவும் இது வேகமாக பரவக்கூடியது எனவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்
இதுவரை 29 நாடுகளில் 373 பேருக்கு ஓமைக்ரான் வகை கொரோனா பரவியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் முதல் முறையாக இன்று இருவருக்கு ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கர்நாடகாவில் 46 மற்றும் 66 வயதுடைய இருவருக்கு இந்த கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.
Also read: 6 குழந்தைகளின் தாய், 14 வயது சிறுவனுடன் ஓட்டம் - 40 வயதில் மலர்ந்த காதல்
இதுவரை எந்தெந்த நாடுகளில் எத்தனை பேருக்கு ஓமைக்ரான் பரவியிருக்கிறது?
1. தென் ஆப்பிரிக்கா - 183
2. பிரிட்டன் - 32
3. போட்ஸ்வானா - 19
4. நெதர்லாந்து - 16
5. ஜெர்மனி - 10
6. ஆஸ்திரேலியா - 8
7. ஹாங்காங் - 7
8. இத்தாலி - 4
9. கனடா - 7
10. போர்சுகல் - 13
11. கானா - 33
12. டென்மார்க் - 6
13. தென் கொரியா - 3
14. நைஜீரியா - 3
15. ஸ்விர்சர்லாந்து - 3
16. ஆஸ்திரியா - 4
17. இந்தியா - 2
18. இஸ்ரேல் - 2
19. பெல்ஜியம் - 2
20. செக் குடியரசு - 1
21. ரீயூனியன் தீவு (பிரான்ஸ்) - 1
22. ஸ்வீடன் - 4
23. ஜப்பான் - 2
24. செக் உடியரசு - 1
25. நார்வே - 2
26. அமெரிக்கா - 1
27. சவுதி அரேபியா - 1
28. அயர்லாந்து - 2
29. ஐக்கிய அரபு அமீரகம் - 14
30. ஸ்பெயின் - 2
இந்தியா சர்வதேச விமான சேவையை டிசம்பர் 15ம் தேதியன்று துவங்க இருந்த நிலையில் ஓமைக்ரான் பரவல் காரணமாக தனது முடிவை ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.