மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தனியார் மதுபானக் கடைகளை மூடுவதற்கான காலக்கெடு நெருங்குவதால், ஒரு சில மதுபான வகைகளை தவிர்த்து, ஒட்டுமொத்தமாக தட்டுப்பாடு அதிகரிக்கும் என்று கூறுகின்றனர்.
மது தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க அரசு முயற்சித்தாலும், பழைய முறையில் இருந்து புதிய கலால் முறைக்கு மாறுவது ஒரு சிக்கலை ஏற்படுத்தக்கூடும். இந்த பிரச்சினையை சமாளிக்க, கலால் துறை 600-க்கும் மேற்பட்ட அரசு மதுபானக் கடைகளில் போதுமான இருப்பு இருக்கும்படி பார்த்துக்கொள்ளுமாறு கேட்டுள்ளது. அதனால் பெரிய பற்றாக்குறை தவிர்க்கப்படும்.
டெல்லியில் தற்போது 850 மதுக்கடைகள் உள்ளன, அவை அனைத்தும் நவம்பர் 16 ஆம் தேதிக்குள் மூடப்படும். தொடர்ந்து, புதுப்பிக்கப்பட்ட கலால் கொள்கையின் கீழ் திறந்த ஏலத்தின் மூலம் உரிமம் பெற்ற புதிய விற்பனையாளர்கள் நவம்பர் 17 முதல் மதுபானக் கடைகளைத் திறக்கத் தொடங்குவார்கள்.
டெல்லியை 32 சில்லறை மண்டலங்களாகப் பிரித்து கடகைகளை சமமாக விநியோக்கிறது அரசு. இதில், 8-10 வார்டுகளை உள்ளடக்கிய ஒவ்வொரு மண்டலமும் கிட்டத்தட்ட 27 மதுபானக் கடைகளைக் கொண்டிருக்கும். இது ஒரு சீர்திருத்த அடிப்படையிலான கொள்கையாக கருதப்படுகிறது. இதன் மூலம் அரசின் கலால் வருவாய் கணிசமாக அதிகரிப்பதை தவிர்த்து, மது வாங்குபவர்களின் அனுபவத்தை மாற்றயமைக்கும் விதமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நகரில் பல மதுபிரியர்கள் ஏற்கனவே பற்றாக்குறை உள்ளதை உணரத் தொடங்கியுள்ளனர். தங்களுக்குப் பிடித்த மதுபான வகைகள் தாங்கள் வழக்கமாக மது வாங்கும் தனியார் கடைகளில் கிடைப்பதில்லை. இதனால், பெரும்பாலான மதுப்பிரியர்கள் கடைகளில் இருந்து மதுபானம் இல்லாமல் திரும்பி செல்வதை காணமுடிகிறது. மதுக்கடைகளும் புதிய இருப்புக்கான ஆர்டர்களை வழங்குவதை நிறுத்திவிட்டன.
இதனால், பண்டிகை காலங்களில் மது தேவை அதிகரிக்கும். அந்த சமயத்தில் மதுபானங்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படுவதை காண முடியும், ஏனெனில் தனியார் கடைகள் மூடப்பட்ட பிறகு அரசு கடைகளை அதிகரித்தாலும், தேவையை கையாள முடியாது. அரசு கடைகள் கூட நவம்பர் 17 முதல் செயல்பாடுகளை முடக்கும் நிலையில் உள்ளது. தனியார் கடைகளை மூடுவது நகரம் முழுவதும் விற்பனையின் சமமற்ற விநியோகத்திற்கு வழிவகுக்கும், என்று மதுபான வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் கோயல் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Delhi, News On Instagram