• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • தடுப்பூசி போடாதவர்களுக்கு மது கிடையாது.. புதிய கட்டுப்பாடுகளால் திண்டாடும் மது பிரியர்கள்!

தடுப்பூசி போடாதவர்களுக்கு மது கிடையாது.. புதிய கட்டுப்பாடுகளால் திண்டாடும் மது பிரியர்கள்!

மதுவிற்பனை

மதுவிற்பனை

கேரள மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள கொரோனா புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகளால், மது வாங்க முடியாமல் திண்டாடி வருகின்றனர் மது பிரியர்கள்.

  • Share this:
    தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் மதுக்கடைகள் நடத்தப்படுவது போன்று கேரளத்தில் பிவரேஜஸ் என்ற நிறுவனம் மூலம் அரசு மதுபான விற்பனை செய்துவருகிறது.

    இந்தநிலையில் அண்மையில் கேரள உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கை விசாரித்த நீதிபதி தேவன் ராமச்சந்திரன், திருமண வீடுகள் மற்றும் இறுதிச்சடங்குகளுக்கு கொரோனா விதிகளை அமல்படுத்தும் அரசு மது விற்கும் கடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

    மதுபானம் வாங்க வரும் நபர்கள், தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்ற நீதிபதி, அப்படி கட்டுப்பாடு விதித்தால்தான் மது வாங்குவற்காக வரும் பல பேர், தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நிலை ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

    Also read: ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு நாடு முழுவதும் தடை!

    அதன்படி இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட சான்றிதழ் அல்லது ஆர்.டி.பி.சி.ஆர் டெஸ்ட் நெகட்டிவ் சான்றிதழுடன் செல்லும் நபர்களுக்கு மட்டுமே மதுக்கடைகளில் மது வழங்கப்படும் என்று கேரள மாநில அரசு அறிவித்தது.

    இவை இரண்டும் இல்லாமல் இருந்தால் மூன்றாவது வாய்ப்பாக கொரோனா பாதிப்பு வந்து அதன்பின்பு நலம் அடைந்து ஒரு மாதம் ஆனதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதனால் தடுப்பூசி போடாத மது பிரியர்களில் ஒரு தரப்பினர், தடுப்பூசி போட்டவர்களுக்கு கமிஷன் கொடுத்து மதுபானம் வாங்கித் தருமாறு மன்றாடி வருகின்றனர்.

    எனினும் மது பிரியர்களில் மற்றொரு தரப்பினர், தங்களுக்கு சிரமம் ஏற்பட்டாலும் அரசின் இந்த கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கேரள அரசின் புதிய கட்டுப்பாடுகளால் அம்மாநிலத்தில் மது விற்பனை 80 சதவீதம் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: