Home /News /national /

மது அருந்துவதற்கான வயது 25-ல் இருந்து 21-ஆக குறைப்பு

மது அருந்துவதற்கான வயது 25-ல் இருந்து 21-ஆக குறைப்பு

மது மிக எளிதாக கிடைக்கும் பொருள் என்பதால், சிறுவர்களும் இந்த மதுப் பழக்கத்திற்கு அடிமையாகத் தொடங்கியுள்ளனர்.

மது மிக எளிதாக கிடைக்கும் பொருள் என்பதால், சிறுவர்களும் இந்த மதுப் பழக்கத்திற்கு அடிமையாகத் தொடங்கியுள்ளனர்.

மது மிக எளிதாக கிடைக்கும் பொருள் என்பதால், சிறுவர்களும் இந்த மதுப் பழக்கத்திற்கு அடிமையாகத் தொடங்கியுள்ளனர்.

    மது அருந்துவதற்கான வயது 25-ல் இருந்து 21-ஆக குறைத்து சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. பொதுமக்கள் எதிர்கொள்ளும் சமூக பிரச்னைகளுக்கு முக்கிய காரணமாக மதுப்பழக்கம் இருந்து வருகிறது. இதற்கு எதிராக பல விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்ட போதிலும் நாளுக்கு நாள் அதை அருந்துவோர் எண்ணிக்கை குறையவில்லை.

    மிக எளிதாக கிடைக்கும் பொருள் என்பதால், சிறுவர்களும் இந்த பழக்கத்திற்கு அடிமையாகத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் மது அருந்துவதற்கான உச்ச வரம்பை 25 வயதில் இருந்து 21 வயதாக குறைக்க ஹரியானா அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    இதையும் படிங்க : மது குடிப்பதால் 200 வகை நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள் - அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரம்..
     இங்கு 25 வயது உடையவர்கள் மட்டுமே மது அருந்த வேண்டும் என்று சட்டம் உள்ளது. ஆனால் இந்த சட்டம் நடைமுறையில் உள்ளதா என்பது உறுதி செய்யப்படவில்லை.

     

    இதையும் படிங்க : மது உங்கள் இதயத்தை எவ்வாறு பாதிக்கிறது தெரியுமா..? எச்சரிக்கும் ஆய்வு
     இந்நிலையில், நேற்று கூடிய ஹரியானா சட்டமன்றத்தில் மது அருந்துவதற்கான வயதை குறைத்து சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி, மதுவை உற்பத்தி செய்தல், மொத்த மற்றும் சில்லறை விற்பனை மேற்கொள்ளுதல் உள்ளிட்டவற்றுக்கான உரிமமும் 21 வயதுடையவர்களுக்கு வழங்கப்படும்.


    இதையும் படிங்க : மது அளவுக்கு மீறினால் நஞ்சு... அளவாக குடித்தால் என்ன ஆகும் தெரியுமா..?

     

    இதேபோன்று, டெல்லியிலும் சமீபத்தில் மது அருந்துவதற்கான வயதை 21 ஆக குறைத்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Haryana, Liquor rehabilitation centre

    அடுத்த செய்தி