கிர் வனப்பகுதியில் மீண்டும் லயன் சஃபாரி தொடங்கியது

கிர் வனப்பகுதியில் மீண்டும் லயன் சஃபாரி தொடங்கியது
லயன் சஃபாரி தொடங்கிய போது
  • News18
  • Last Updated: October 16, 2018, 11:10 AM IST
  • Share this:
குஜராத் மாநிலம் கிர் வனப்பகுதியில் பல நாட்களுக்கு பின் மீண்டும் லயன் சஃபாரி தொடங்கியது. மேலும் இந்த பார்க்கில் முதல் முறையாக 25 பெண்கள் வழிகாட்டிகளாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள். 

குஜராத்தின் கிர் காடுகளில் நூற்றுக்கணக்கான ஆசிய சிங்கங்கள் இருக்கின்றன. இதில் 2015-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, 523 சிங்கங்கள் இருந்தன. இதனிடையே வைரஸ் தொற்றுநோய் உள்ளிட்ட பல காரணங்களால் கிர் வனப்பகுதியில் உள்ள சிங்கங்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தது. அதனால் இதை அழிந்துவரும் இனங்களில் ஒன்றாக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் அறிவித்தது.

கடந்த சில வாரங்களில் மட்டும் இந்த கிர் வனப்பகுதியில் 23 ஆசிய சிங்கங்கள் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிடிவி என்ற வைரஸ் நோய் தாக்குதலால்தான் சிங்கங்கள் இறந்து வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த வைரஸ் பரவினால், விலங்குகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து, முக்கிய உறுப்புகளை செயலிழக்க செய்துவிடும். எனவே கிர் வனப்பகுதியில் எஞ்சியுள்ள சிங்கங்களை காப்பாற்ற, அங்கு பரவி வரும் வைரஸ் நோயை கட்டுபடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.


மேலும், வைரஸ் தாக்குதலை தடுக்கும் வகையில், 36 சிங்கங்களை பிடித்து சிறப்பு முகாம்களில் அடைத்து வைத்து, அவற்றுக்கு அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட தடுப்பூசி போடப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது சிங்கங்களின் உடல் நிலை சீராகி வரும் நிலையில் லயன் சஃபாரி செய்ய கடந்த ஜூன் மாதம் 15-ம் தேதியில் இருந்து அக்டோபர் 16-ம் (இன்று) தேதி வரை நீடித்த தடையை நீக்கி இன்றிலிருந்து பல நாட்களுக்கு பின் மீண்டும் லயன் சஃபாரி தொடங்கியது. இதில் பயன்படுத்தப்படும் வாகனம் இரும்பு கூண்டுகளுடன் மிகவும் பாதுகாப்பானதாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் இங்கு செல்ல ரூ. 2600 கட்டணம் செலுத்த வேண்டும். அனுமதி கட்டணம் ரூ. 700, ஜிப்சி கட்டணம் ரூ. ரூ. 1500 மற்றும் வழிகாட்டி கட்டணம் ரூ. 400 என மொத்தம் ரூ. 2600 இந்த சஃபாரிக்கு செலவழிக்கப்படுகிறது.

மேலும் இந்த வனப்பகுதியில் முதல் முறையாக 25 பெண்கள் வழிகாட்டிகளாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள். பார்க்கிற்கு வரும் சுற்றுலா பெண்களுக்கு அவர்கள் உதவுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: October 16, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading