Home /News /national /

குட்டிகளை காப்பாற்ற 4 பேரை தாக்கிய 'ஆசிய சிங்கம்'.. வேட்டையாடுபவர்களைத் தேடும் வனத்துறையினர்..

குட்டிகளை காப்பாற்ற 4 பேரை தாக்கிய 'ஆசிய சிங்கம்'.. வேட்டையாடுபவர்களைத் தேடும் வனத்துறையினர்..

பிப்ரவரி 3-ம் தேதி புதன்கிழமை அன்று 'கிர்' சோம்நாத்தின் சூத்திரபாதா தாலுகாவில் (Sutrapada taluka of Gir Somnath) ஆசிய பெண் சிங்கமொன்று (Asiatic Lion) தனது நான்கு குட்டிகளைக் காப்பாற்ற வேட்டைக்காரர்களைத் தாக்கியது.

பிப்ரவரி 3-ம் தேதி புதன்கிழமை அன்று 'கிர்' சோம்நாத்தின் சூத்திரபாதா தாலுகாவில் (Sutrapada taluka of Gir Somnath) ஆசிய பெண் சிங்கமொன்று (Asiatic Lion) தனது நான்கு குட்டிகளைக் காப்பாற்ற வேட்டைக்காரர்களைத் தாக்கியது.

பிப்ரவரி 3-ம் தேதி புதன்கிழமை அன்று 'கிர்' சோம்நாத்தின் சூத்திரபாதா தாலுகாவில் (Sutrapada taluka of Gir Somnath) ஆசிய பெண் சிங்கமொன்று (Asiatic Lion) தனது நான்கு குட்டிகளைக் காப்பாற்ற வேட்டைக்காரர்களைத் தாக்கியது.

சிங்கங்களில் ஆப்பிரிக்க சிங்கம், ஆசிய சிங்கம் என இரண்டு இனங்கள் உள்ளன. அதில் முதலாவது, ஆப்பிரிக்கக் கண்டத்தின் பல பகுதிகளில் பரவி வாழ்கின்றன. ஆனால், ஆசிய சிங்கம், உலகிலேயே இந்தியாவின் குஜராத்தின், கிர் காடுகளில் மட்டும்தான் வாழ்கின்றன. அரிதாகி வரும் சிங்கங்களுக்கு அரசுகள் பல்வேறு நன்மைகளை செய்துவந்தாலும் ஒரு சில மோசமான நபர்களின் கையில் இவை சிக்கி சின்னாபின்னாமாகின்றன. அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தில், சிங்கத்திற்கு பெரிதாக ஒன்றும் ஆகவில்லை. என்றாலும், வேட்டைக்கார்கள் சிங்கத்தால் தாக்கப்பட்டு ஆஸ்பிட்டலில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். 

பிப்ரவரி 3-ம் தேதி புதன்கிழமை அன்று 'கிர்' சோம்நாத்தின் சூத்திரபாதா தாலுகாவில் (Sutrapada taluka of Gir Somnath) ஆசிய பெண் சிங்கமொன்று (Asiatic Lion) தனது நான்கு குட்டிகளைக் காப்பாற்ற வேட்டைக்காரர்களைத் தாக்கியது. கிர் சோம்நாத் மாவட்டத்தின் சூத்திரபாதா தாலுகாவில் பிராச்சி என்ற இடத்திற்கு அருகிலுள்ள கம்பா என்ற கிராமத்தில் அரசு தரிசு நிலத்தில் வலையை வைத்து குட்டிகளைப் பிடிக்க முயன்றதாகக் கூறப்படும் நான்கு வேட்டைக்காரர்களை சிங்கம் ஒன்று தாக்கியதாக ஜுனகத் பிராந்திய வனப் பிரிவின் துணை வனப் பாதுகாவலர் (DCF) சுனில் பெர்வால் (Sunil Berwal) தெரிவித்தார். 

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஹபீப் சம்ஷர் பர்மர் (40) சுரேந்திரநகர் மாவட்டத்தில் தங்காத் என்ற இடத்தில் வசித்து வருகிறார். ஹபீப் உட்பட அவரது மூன்று கூட்டாளிகளும் வனத்துறை மற்றும் ஜுனகத் மாவட்ட போலீசாரின் கூட்டுக் குழுவால் கைது செய்யப்பட்டதாக வன அதிகாரிகள் தெரிவித்தனர். பெர்வால், இந்த சம்பவத்தை விவரிக்கும் போது, இதுபோன்ற பொறிகள் சிறிய விலங்குகளை பிடிக்க பயன்படுத்தப்படுவதாகவும், புதன்கிழமை காலை ஒரு சிங்க குட்டி அதில் சிக்கிக்கொண்டதாகவும் கூறினார்.

பின்னர் அந்த சிங்கக்குட்டியின் தாய் அந்த வேட்டைகார்களை சும்மா விடவில்லை, அவர்களைத் தாக்கியது. இதில் காயமடைந்தவர்கள் தலாலாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களுக்கு ஏற்பட்டது சாதாரண காயம் இல்லை என்பதை அறிந்த டாக்டர்கள் சம்பவம் குறித்து வனத்துறைக்கு தெரிவித்தனர். உடனே சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் குழு அங்கே ஒரு சிங்க குட்டியின் கால் ஒரு கிளம்பைப் போன்ற வலையில் சிக்கியிருப்பதைக் கண்டுபிடித்தனர் என்று அவர் கூறினார். சிறு காயங்களுக்குடன் குட்டி மீட்கப்பட்டது. 

வன அதிகாரிகள் தங்களைத் தேடக்கூடும் என்பதை உணர்ந்த பர்மரும் அவரது கூட்டாளிகளும் மருத்துவமனையிலிருந்து தப்பி சென்றுவிட்டனர் என்றும் அந்த DCF அதிகாரி கூறினார். அவர்கள் வைத்திருந்த வலை சிங்கத்தை பிடிப்பதற்கா அல்லது பிற விலங்குகளை வேட்டையாட வைத்த வலையில் சிங்கம் மாட்டிக்கொண்டதா என்பதை அறிய குழு வேலைசெய்து வருவதாக கூறிய அவர், இது ஒரு வேட்டையாடும் முயற்சி போல் தெரிகிறது என்றார். கிர் வனவிலங்கு பிரிவில் தலாலாவின் ரேஞ்ச் வன அலுவலர் பிமல்குமார் பட் (Bimalkumar Bhatt) , சிகிச்சையின்போது பர்மருக்கு சுவாசிக்க உதவியாக இருந்த ஆக்ஸிஜன் சிலிண்டருடன் இப்போது அவர் தப்பித்து சென்றுவிட்டதாக கூறியுள்ளார்.

ஆனால் அவர் தப்பித்து சென்ற சில மணி நேரத்தில் வந்தலி தாலுகாவில் உள்ள வட்லா கிராமத்திற்கு அருகில் சுற்றிவளைத்து கைது செய்யப்பட்டார். மேலும் காயமடைந்த ஒருவர் ஜூனகாட்டில் உள்ள சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது மற்ற கூட்டாளிகள் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டுள்ள வேட்டை கும்பலின் மற்ற உறுப்பினர்களையும் அவர்களின் உண்மையான அடையாளங்களையும் வனத்துறையினர் தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.
Published by:Ram Sankar
First published:

Tags: Asian lions, Gujarat

அடுத்த செய்தி