முகப்பு /செய்தி /இந்தியா / கூகுளையே மிரள வைக்கும் ரெஸ்யூம் இது தான்! - வைரலாகும் லிங்கிடு இன் போஸ்ட்

கூகுளையே மிரள வைக்கும் ரெஸ்யூம் இது தான்! - வைரலாகும் லிங்கிடு இன் போஸ்ட்

கூகுள் வேலைக்கு கிரியேட்டிவ் ரெஸ்யூம்

கூகுள் வேலைக்கு கிரியேட்டிவ் ரெஸ்யூம்

லிங்கிடு இன் தளத்தில் யூசர் ஒருவர் உலகின் முன்னணி நிறுவனமான கூகுள் நிறுவனத்தில் பணிக்கான தனித்துவமான ரெஸ்யூமை உருவாக்கி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

பொதுவாக வேலை பெறுவதற்கு தங்கள் சுய விவரக்குறிப்பான ரெஸ்யூம் ரெடி செய்வதற்கு அதிக மெனக்கெடல் மற்றும் கவனத்தை தற்கால இளைஞர்கள் தந்து வருகின்றனர். குறிப்பாக, தங்களின் கனவு நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என்றால் அதற்காக தனித்துவமான புதிய ஐடியாக்களை புகுத்தி சில அபாரமான ரெஸ்யூம்களை இளைஞர்கள் உருவாக்குவது உண்டு.

அப்படித்தான் லிங்கிடு இன் தளத்தில் யூசர் ஒருவர் உலகின் முன்னணி நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் பணிக்காக தனித்துவமான ரெஸ்யூமை உருவாக்கி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். ஆதித்யா சர்மா என்ற இந்த இளைஞர், 'HiCounselor' என்ற வேலை சார்ந்த ஆலோசனை வழங்கும் நிறுவனத்தின் சிஇஓ ஆவார். கூகுள் செர்ச் ரிசல்ட் முதல் பக்கத்தை டெம்ப்ளேட்டாக வைத்துக்கொண்டு, கூகுள் டார்க் தீம்மில் தனது பெயரில் ரெஸ்யூம் உருவாக்கியுள்ளார்.

கூகுளில் தேடும் செர்ச் பகுதியில் சிறந்த ஊழியர் யார் என்று கேள்வி எழுப்பி, அதற்கு ஆதித்யா சர்மா என்று கூகுள் பதில் சொல்வதாக வைத்து அதில் தனது விவரங்களை பதிவு செய்து ரெஸ்யூம் உருவாக்கியுள்ளார் இவர். தனது இந்த ரெஸ்யூமை பதிவு செய்த ஆதித்யா, கூகுள் அனைவரின் கனவு நிறுவனமாகும். ஆனால், அவர்கள் மிகுந்த கவனத்துடன் தான் தனது பணியாளர்களை எடுப்பார்கள்.

இதையும் படிங்க: இந்தியாவின் சிங்கப்பெண்கள்.. ஆசியாவின் சக்தி வாய்ந்த 20 பெண் தொழிலதிபர் பட்டியலில் இடம்பிடித்த மூவர்!

எனவே, நான் கிரியெட்டிவ்வாக இந்த ரெஸ்யூமை தயாரித்துள்ளேன் எனக் கூறி இதை ஆதித்யா பதிவு செய்துள்ளார்.இந்த பதிவுக்கு 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகள், சுமார் 2,000 கமெண்டுகள் கிடைத்துள்ளன. மேலும் இவை பலராலும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.தனது கிரியேடிவிட்டியால் ஒரே நாளில் கூகுளில் பலராலும் தேடும் பிரபலமாகியுள்ளார் இந்த ஆதித்யா சர்மா.

First published:

Tags: Google, Job, LinkedIn, Viral News