முகப்பு /செய்தி /இந்தியா / ஹெல்மெட் அணியாததற்கு அபராதம் விதித்ததற்காக போலீஸ் ஸ்டேஷனின் மின் இணைப்பை துண்டித்த லைன்மேன்

ஹெல்மெட் அணியாததற்கு அபராதம் விதித்ததற்காக போலீஸ் ஸ்டேஷனின் மின் இணைப்பை துண்டித்த லைன்மேன்

உ.பி சம்பவம்

உ.பி சம்பவம்

உத்தரபிரதேசத்தில் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணியாமல் சென்றால் அதிகாரப்பூர்வமாக ரூ.2,000 அபராதம் தான் விதிக்கப்பட்டும். ஆனால் மெஹ்தாபுக்கு ரூ.6,000 அபராதம் விதிக்கப்பட்டது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Uttar Pradesh, India

பைக் ஓட்டும் போது ஹெல்மெட் அணியாததற்கு அதிக அபராதம் விதித்ததால் கோபமடைந்த உத்தரபிரதேச மாநிலம் லைன்மேன் ஒருவர், காவல் நிலையத்தின் மின் இணைப்பைத் துண்டித்துள்ளார்.

இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் உள்ள ஷாம்லி பகுதியில் நடந்துள்ளது. போக்குவரத்து விதிமீறலுக்காக உத்திரப் பிரதேசத்தின், மாநில மின் துறையைச் சேர்ந்த ஒப்பந்த ஊழியர் மெஹ்தாபுக்கு, மாவட்ட போக்குவரத்து போலீசார், 6,000 ரூபாய் அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது.

உத்தரபிரதேசத்தில் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணியாமல் சென்றால் அதிகாரப்பூர்வமாக ரூ.2,000 அபராதம் தான் விதிக்கப்பட்டும். ஆனால் மெஹ்தாபுக்கு ரூ.6,000 அபராதம் விதிக்கப்பட்டது ஏன் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இதனிடையே, அதிக அபராதம் விதித்ததால் கோபமடைந்த அவர், குறிப்பிட்ட காவல் நிலையத்தின் மின் இணைப்பை துண்டித்துள்ளார்.

இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, அதில் 5,000 மாத சம்பளம் பெறும் லைன்மேன், ஷாம்லியின் கஸ்பா தானா பவனுக்கு வெளியே ஒரு கம்பத்தில் ஏறி மின் கட்டணம் செலுத்தாததைக் காரணம் காட்டி காவல் நிலையத்தின் மின்சார விநியோகத்தை துண்டிக்கிறார்.

இதையும் படிங்க: 30 ஆயிரம் ரூபாய்க்காக இந்திய ராணுவம் மீது தாக்குதல் நடத்த வந்த தீவிரவாதி... பின்னணியில் பாகிஸ்தான் ராணுவம்

இந்த சம்பவம் குறித்து பேசிய லைன்மேன் மெஹ்தாப், பணி முடிந்து பைக்கில் திரும்பிக் கொண்டிருந்த போது ஹெல்மெட் அணியாததால் போக்குவரத்து போலீசார் அவரை தடுத்து நிறுத்தியதாக கூறினார். இந்த குற்றத்தை மீண்டும் செய்ய மாட்டேன். இந்த ஒரு முறை மட்டும் மன்னித்துவிடுங்கள் என்று காவல்துறையிடம் கெஞ்சினேன், ஆனால் போலீசார் செவிசாய்க்கவில்லை. 6000 ரூபாய் அபராதம் விதித்தனர் என்று தெரிவித்தார்.

First published:

Tags: Traffic Police, Uttar pradesh