13 மாதங்கள்... 3000 கி.மீ... நடைப்பயணத்தை நிறைவு செய்த ஜெகன்மோகன் ரெட்டி!

காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட மோதலையடுத்து, அவரது மகன் ஜெகன் மோகன், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் என்ற தனிகட்சியைத் தொடங்கினார்.

news18
Updated: January 9, 2019, 1:13 PM IST
13 மாதங்கள்... 3000 கி.மீ... நடைப்பயணத்தை நிறைவு செய்த ஜெகன்மோகன் ரெட்டி!
ஜெகன்மோகன் ரெட்டி
news18
Updated: January 9, 2019, 1:13 PM IST
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, 13 மாதங்கள் தொடர்ந்த அவரது பாதயாத்திரையை நிறைவு செய்தார்.

ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மறைவுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட மோதலையடுத்து, அவரது மகன் ஜெகன் மோகன், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் என்ற தனிகட்சியைத் தொடங்கினார்.

பின்னர், கட்சியைப் பலப்படுத்துவதற்காக, அவரது தந்தையைப் பின்பற்றி நடைப்பயணம்(பாதயாத்திரை) மேற்கொண்டார்.

2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் அவரது தந்தையைப் பின்பற்றி பாதயாத்திரை அறிவித்தார். அப்போது, தொடங்கிய பாதயாத்திரையை 13 மாதங்கள் கழித்து நிறைவு செய்தார்.

இதுகுறித்து தெரிவித்த ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர்,  "ஜெகன்மோகன் ரெட்டி 134 தொகுதிகளில் 3,000 கி.மீ நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்தியாவில் எந்தக் கட்சியும் இதுவரையில் செய்திராத ஒன்று இது. 'ஜெகன்மோகன் ரெட்டி வேண்டும்'(‘Ravali Jagan) என்ற கோரிக்கையுடன் நடைப்பயணம் நடைபெற்றது.

இந்தப் பயணம் மூலம் 2 கோடி மக்களை சென்றடைந்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அரசியல் வல்லுநர்கள், "ஜெகன் மோகன் ரெட்டியின் நடைப்பயணம் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுக்கு நெருக்கடி அளிக்கும்" என்கின்றனர்.
Loading...
Also see:

First published: January 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...