• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • இந்தியாவில் மின்னல் தாக்குதல் 34% அதிகரிப்பு: ஆய்வில் தகவல்!

இந்தியாவில் மின்னல் தாக்குதல் 34% அதிகரிப்பு: ஆய்வில் தகவல்!

மின்னல்

மின்னல்

இடியுடன் கூடிய மின்னல் வெட்டுதலே, அதிக உயிரிழப்புக்கு காரணமான இயற்கை பேரழிவு என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பட்டியலிட்டுள்ளது.

  • Share this:
    இந்தியாவில் மின்னல் ஏற்படும் நிகழ்வு 34 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

    இந்தியாவில் மின்னல் தோன்றும் நிகழ்வு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மின்னல் தாக்கி உயிரிழப்போர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.  ராஜஸ்தானில் உயர் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து செல்ஃபி எடுத்து கொண்டிருந்த 11 பேர் அண்மையில் மின்னல் தாக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், சர்வதேச அளவில் மின்னல் தோன்றும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளதையடுத்து அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம்  ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இந்த  ஆய்வில், இந்தியாவில் மின்னல் ஏற்படும் நிகழ்வு 34 சதவீதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.  கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நடப்பு ஆண்டு மார்ச் வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவில் ஒரு கோடியே 85 லட்சம் மின்னல்கள் தோன்றியுள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில்  1 கோடியே 38 லட்சம் மின்னல்கள் தோன்றியிருந்தது.

    இதையும் படிங்க: பெண்கள், பிற்படுத்தப்பட்டோர் மத்திய அமைச்சராவதை எதிர்க்கட்சிகளால் பொறுக்க முடியவில்லை: பிரதமர் மோடி!


    இதேபோல், கடந்த ஆண்டு மார்ச் முதல் நடப்பாண்டு ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் 1,697 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.  மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம், பீகார், புதுச்சேரி, பஞ்சாப் மத்திய பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மின்னல் தோன்றுவது அதிகரித்துள்ளது.  பஞ்சாபில் சுமார் 331 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.  காலநிலை மாற்றம் காரணமாகவே மின்னல் தோன்றுவது அதிகரித்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

    இடியுடன் கூடிய மின்னல் வெட்டுதலே, அதிக உயிரிழப்புக்கு காரணமான இயற்கை பேரழிவு என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பட்டியலிட்டுள்ளது.

    புவி வெப்பநிலையில் ஒரு டிகிரி செல்ஷியஸ் அதிகரிக்கும்போது, மின்னல் தாக்கத்தின் அலைவெண் 12 சதவிகிதம் அதிகரிக்கும் என கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் கடந்த 2015ம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்தது. அதன்படி, தற்போது புவியின் வெப்பம் அதிகரித்துக் கொண்டிருப்பதால், மின்னல் தாக்குதலின் எண்ணிக்கையும் அதிகரிப்பதாகச் சொல்லப்படுகிறது

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: