HOME»NEWS»NATIONAL»life sentence for both convicts in kerala sister abaya murder case by cbi court crime news video vai
கேரள கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில் 28 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு.. 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது சிபிஐ நீதிமன்றம்.. (வீடியோ)
கேரளாவில் அபயா என்ற கன்னியாஸ்திரி கொல்லப்பட்ட வழக்கில் பாதிரியார் தாமஸ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த கன்னியாஸ்திரி செஃபிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கோட்டயம் பள்ளி ஒன்றில் கடந்த 1992ம் ஆண்டு மார்ச் மாதம் 27ம் தேதி அபயா கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். முதலில் இந்த வழக்கு தற்கொலை என்று முடிக்கப்பட்டது. தொடர் போராட்டங்களால் 1993ம் ஆண்டு வழக்கு சிபிஐ வசம் சென்றது. 28 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கின் விசாரணை முடிந்து 22ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது.
பாதிரியார் தாமஸ் கோட்டூரும், கன்னியாஸ்திரி செஃபியும் குற்றவாளிகள் என்று செவ்வாய்க்கிழமை திருவனந்தபுரம் சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் இருவருக்கும் இன்று ஆயுள் தண்டனை அளித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.